`கடவுள் இருக்கிறார் என நிரூபித்தால் பதவி விலகுகிறேன்' - பிலிப்பைன்ஸ் அதிபர் சர்ச்சை கருத்து!Sponsoredலகில் கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபித்தால் பதவி விலகத் தயார் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டே (Rodrigo Duterte) கூறியிருப்பது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.


டவாவோ நகரில் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டே, 'கடவுள் இருக்கிறார் என்பதற்குச் சாட்சி இருக்கிறதா?' என்று கேள்வி எழுப்பினார். பிறகு அந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையில், 'கடவுளைப் பார்க்க முடியும், பேச முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆதாரத்தைக் கொடுத்தால் உடனடியாகத் தான் பதவி விலகத் தயார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கு முன்பு ஏற்கெனவே கடவுளை முட்டாள் என்று கடுமையாக விமர்சித்திருந்த டுட்டெர்டே தற்போது கடவுள் இருப்பதை நிரூபித்தால் பதவி விலகத் தயார் என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து கடவுள் குறித்து கருத்து தெரிவித்து வரும் இவரால் அங்கு அடிக்கடி சர்ச்சை ஏற்படுகிறது. அவரது கருத்து ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored