அமெரிக்காவில் இந்திய மாணவன் சுட்டுக் கொலை -குற்றவாளியைத் தேடும் பணி தீவிரம்!Sponsoredமேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற இந்திய மாணவன் சரத் கொப்பு, மர்ம நபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சரத் கொப்பு. இவரது தந்தை மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவர், வாரங்கல் மாவட்டத்தில் உள்ள பொறியில் கல்லூரியில், பட்டம் பெற்று, ஐதராபாத்தில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், மேற்படிப்புக்காக அமெரிக்க சென்ற அவர், மிஸ்ஸோரி பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் படித்து வந்துள்ளார். படிப்புடன், கான்சாஸ் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் பகுதி நேர வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், சரத் வேலை செய்யும் உணவகத்துக்கு வந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்தவர்களிடம் துப்பாக்கியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அப்போது, சரத் தப்பிக்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, சரத்தை அந்த மர்ம நபர் சுட்டுள்ளார். 

Sponsored


இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், சரத்தை அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பின், சரத் குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர் அமெரிக்க போலீஸார். சர்த் உடலை இந்தியா கொண்டுவர ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. 

Sponsored


உணவகத்திலிருந்த சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்த போலீஸார், கொலை செய்தவரை அடையாளம் கண்டு, அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.Trending Articles

Sponsored