360 பயணிகளுடன் சென்ற துருக்கி ரயில் விபத்து?!Sponsoredதுருக்கியில் 360 பயணிகளுடன் சென்ற ரயில் ஒன்று விபத்துகுள்ளானது. இதில் 10 பேர் வரை இறந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 70-ற்கும் அதிகமானோருக்கு காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

துருக்கி - பல்கேரியா எல்லையான கபிகுலே (Kapikule) பகுதியிலிருந்து இஸ்தான்புல் நகரத்துக்கு இந்த ரயில் போய்க்கொண்டிருந்தது. அப்போது அந்த ரயிலின் 6 பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின. விபத்து நடந்து சில மணிக்குள்ளாகவே 100க்கும் அதிகமான ஆம்புலன்ஸ்கள் அங்கு கொண்டு வரப்பட்டன. மேலும், ஹெலிகாப்டர்களும், மீட்புப் படையினரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து துரிதமாக, மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Sponsored


 

Sponsored


விபத்தில் இறந்தவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார் துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan). தொடர் மழையும், அதனால் ஏற்பட்ட மண் சரிவுமே இந்த விபத்துக்கான முக்கியக் காரணங்களாக சொல்லப்படுகின்றன. 

துருக்கியில் ஏற்கெனவே, 2008-ம் ஆண்டு இஸ்தான்புல் அருகே நடந்த ஒரு ரயில் விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். அதேபோல், துருக்கி வரலாற்றிலேயே மிக மோசமாக 2004-ம் ஆண்டு ஜூலை மாதம் நிகழ்ந்த ரயில் விபத்தில் 41 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. Trending Articles

Sponsored