குகையிலிருந்து மீட்கப்பட்ட 8 சிறுவர்கள்! - இறுதிக்கட்ட மீட்புப் பணிக்குத் தயாராகும் வீரர்கள்



Sponsored



தாய்லாந்து குகையில் சிக்கிய எட்டு சிறுவர்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்று இறுதிக்கட்ட மீட்புப் பணிக்காக சீல் வீரர்கள் குகையினுள் செல்ல உள்ளனர்.

வடக்கு தாய்லாந்துப் பகுதியில் உள்ள தி தம் லுஅங் என்ற குகைக்குள் கடந்த ஜூன் 23-ம் தேதியன்று சென்ற 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் திடீரெனப் பெய்த கனமழையில் சிக்கிக்கொண்டனர். அதன்பிறகு, ஒருவாரமாகத் தீவிர தேடுதல் பணி நடைபெற்றது. இந்த மீட்புப் பணியில், தாய்லாந்து மீட்புப் படையினருடன் சீனா, மியான்மர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாட்டைச் சேர்ந்த 1,000 மீட்புப் படையினர் பங்கேற்றனர். 10 நாள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, சிறுவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குகை முழுவதும் பல அடி ஆழத்துக்குத் தண்ணீர் இருந்ததால், அவர்களைக் கண்டுபிடித்தும் வெளியில் கொண்டுவர முடியாமல் மீட்புப் படையினர் திணறினர். 

Sponsored


Sponsored


சிறுவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டு இரண்டு நாள்களுக்குப் பின்னரே மீட்புப் பணிகள் தொடங்கின. முதலில் கடந்த 8-ம் தேதியன்று நான்கு சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து நேற்று, மேலும் நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மொத்தம் 8 சிறுவர்கள் குகையிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டுள்ளதாக தாய்லாந்து அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

குகையினுள் மேலும் 4 சிறுவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் மட்டுமே உள்ளனர். அவர்களை மீட்கும் இறுதிக்கட்ட பணிகளில் இன்று சீல் வீரர்கள் ஈடுபட உள்ளனர். இன்று ஒரே நாளிலேயே அனைவரையும் வெளியில் அழைத்து வரத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த மீட்புப் பணிகளில் மொத்தம் 18 சர்வதேச சீல் வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது. மேலும், முதல்கட்ட மீட்புப் பணிகள் மட்டுமே தாமதமாக நடைபெற்றதாகவும், இரண்டாம் கட்ட மீட்புப் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மீட்கப்பட்ட 8 சிறுவர்களும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.அவர்கள் அனைவரும் தற்போது நலமாக இருப்பதாகவும் தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது. 



Trending Articles

Sponsored