``நடனமாடுவது குற்றமல்ல!” இரானியப் பெண்ணின் கைதுக்கு இன்ஸ்டா டான்ஸ் எதிர்ப்பு! #DancingIsNotACrimeSponsoredPC: instagram.com/maedeh_hozhabri

ந்த ஒரு கலையின் வெளிப்பாடும் சுதந்திரத்தின் குறியீடுதான். நடனம், இசை, எழுத்து என விரிந்தபோதுதான் ஒரு சமூகத்தின் பெண் முன்னேற்றமும் நிகழ்ந்தது என்பதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் உண்டு. கலை சார்ந்து இயங்கும் பெண்களைப் பிரபலமாகப் பார்க்கும் அதே நேரம், அவர்கள் மீது மிக எளிதாக விமர்சனங்கள் வீசுவதும் இன்று அதிகரித்துவருகிறது. `இவள் சுதந்திரமாக இயங்கும் பெண்' என்ற முத்திரைக்குக் கிடைக்கும் பரிசுகளே இவை. ஒரு நாட்டின் பெண் சுதந்திரத்தின் அளவைத் தெரிந்துகொள்ள, அந்த நாட்டின் கலை சார்ந்து இயங்கும் பெண்கள் எண்ணிக்கையைக் கணக்கிட்டாலே போதும்.

Sponsored


சமூக வலைதளத்தில் பிரபலமானவர், மேதிஹ் ஹோஜப்ரி (Maedeh Hojabri) என்ற இரானிய இளம்பெண். இவர், இஸ்லாமிய கட்டுப்பாடுகளை மீறி தன் நடன வீடியோக்களை வெளியிட்டதாகச் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதற்காக, உலகம் முழுவதும் உள்ள பலரின் கண்டனத்தைச் சந்தித்துள்ளது அந்த நாடு. மேதிஹ் கைது செய்யப்பட்டத்தைக் கண்டித்தும், பெண்கள் நடனமாடுவது குற்றமல்ல என்ற கருத்தை வலியுறுத்தியும் பல இரானியப் பெண்கள், தங்களின் வீடுகளிலும் பொது இடங்களிலும் நடனமாடி, அந்த வீடியோக்களை #Dancingisnotacrime என்ற ஹேஷ்டெக்குடன் பதிவேற்றிவருகின்றனர் . 

Sponsored


இரானிய அரசு விதிப்படி, பெண்கள் ஹிஜாப் என்ற தலையணியை அணியாமலும், வெஸ்டர்ன் ஆடைகளை அணிவதும், பொதுவெளியில் எதிர்பாலினத்தவர்கள் முன்பும் நடனமாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. குடும்பத்தவர்கள் முன்னிலையில் மட்டும் பெண்கள் நடனம் ஆடலாம். ஹோஜப்ரியின் நடன வீடியோக்களில், அவர் ஹிஜாப் அணியாமலும், வெஸ்டர்ன் ஆடைகள் அணிந்தபடியும் நடனமாடி இருக்கிறார். இது குற்றமாகக் கருதப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு தெரிவித்ததுக்காக மேலும் இரு பெண்களையும் கைது செய்துள்ளனர். மூன்று நாள் காவலுக்குப் பிறகு மூவரையும் விடுவித்துள்ளனர். ஹோஜ்பரிக்கு வீடியோக்களைப் பதிவேற்றவும் தடை விதித்துள்ளனர்.

PC: instagram.com/maedeh_hozhabri/

மேலும், இரானிய அரசு தொலைக்காட்சியில், ` Wrong Path' என்ற நிகழ்ச்சியில், இஸ்லாமிய விதிகளை மீறியதாக இந்த மூவரின் புகைப்படங்களையும் காண்பித்துள்ளனர். `பப்ளிக் ஷேமிங்’காக இப்படிச் செய்வது இரானில் வழக்கம். இதுகுறித்து ஹோஸ்ஸீன் ரோனாகி என்பவர், `17, 18 வயதிலிருக்கும் பெண்கள் ஆடிப்பாடி மகிழ்ந்திருப்பதை அநாகரிகம் என்று கைது செய்வதும், குழந்தைகளைப் பாலியல் வன்முறை செய்தவர்கள் சுதந்திரமாகத் திரிவதும் நடக்கிறது. இதை உலகில் யார் கேள்விப்பட்டாலும் சிரிப்பார்கள். இது மிகவும் நம்பமுடியாத ஒரு செயல்' என்று தனது வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இரானில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல்முறையல்ல. 2014-ம் ஆண்டு, பிரபல பாடகரான பிரேல் வில்லியம்ஸின் `ஹேப்பி' பாடலுக்கு, டேஹ்ரானில் உள்ள ஆறு பெண்கள் நடனமாடி, வீடியோவாகப் பதிவிட்டதற்காக, ஓராண்டு சிறையும் 91 சவுக்கடிகளும் தண்டனையாக வழங்கப்பட்டன, மிகவும் வெட்கப்படவேண்டிய வேதனை நிகழ்வு.

இன்று உலகம் முழுவதும் பெண்களின் முன்னேற்றம் வளர்ந்து வருகின்றன. சவுதி அரேபியா போன்ற நாடுகளிலும், பெண்கள் தங்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து, அவர்கள் வாகனங்கள் ஓட்டலாம் என்ற சுதந்திரத்தைப் பெற்றிருக்கின்றனர்.

ஆனால், எந்தக் காலமாக இருந்தாலும், தங்கள் உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் பெண்கள் போராடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதையே இத்தகையச் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நமக்குச் சொல்கின்றன.Trending Articles

Sponsored