மியூசியம், 400 கோடியில் சினிமா; தாய்லாந்து குகையின் புதிய அப்டேட்ஸ்Sponsoredதாய்லாந்தில் சிறுவர்கள் சிக்கியிருந்த குகையை அருங்காட்சியமாக மாற்ற முடிவுசெய்துள்ளதாக தாய்லாந்து மீட்புக் குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாள்களாக தாய்லாந்து என்றாலே குகையில் சிக்கிய சிறுவர்களும், அதற்காக மீட்புப் பணிகளும்தான் அனைவரும் நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு இந்த மீட்புப் பணிகள் உலக மக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜூன் 23-ம் தேதியன்று  தி தம் லுஅங் குகைக்குள் சென்ற சிறுவர்கள் அன்று பெய்த கனமழையினால் குகையினுள்ளேயே மாட்டிக்கொண்டனர். பிறகு அவர்களைத் தேடுவதற்கு சர்வதேச அளவில் மிகவும் திறமைவாய்ந்த பல நூறு வீரர்கள் வரவழைக்கப்பட்டு முறையான திட்டமிடல் மற்றும் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு நேற்று முன்தினம் அனைத்து சிறுவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடந்த இரண்டு நாள்களாக சமூகவலைதளத்தை ஆக்கிரமித்துள்ளது இந்த மீட்புப்பணிகளும் அதில் பணியாற்றிய வீரர்கள் குறித்த செய்தி மற்றும் புகைப்படங்கள் தான். தற்போது மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் மருத்துவமனையில் மிகவும் நலமாக உள்ளனர் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சை பெரும் வீடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளது.

Sponsored


Video Credits ; BBC

Sponsored


13 பேரை மீட்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் போராடியது அனைவரது மனதையும் மிகவும் கவர்ந்தது. தற்போது தாய்லாந்தில் உள்ள தி தம் லூஅங் குகை யாராலும் மறக்கமுடியாத அளவுக்கு மாறிப் போயுள்ளது. இந்நிலையில், அந்தக் குகையை அருங்காட்சியமாக மாற்ற முடிவு செய்திருப்பதாக தாய்லாந்து மீட்புக் குழுவின் தலைவர் நரோங்சக் ஒசோட்டனாகோர்ன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த அருங்காட்சியகத்தில் சிறுவர்கள் எப்படி மீட்கப்பட்டார்கள் என்பதைக் காட்சிப்படுத்த இருப்பதாகவும், இது தாய்லாந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு மேலும் ஒரு முக்கிய ஈர்ப்பாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். 

மேலும், குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் மீட்புக் குழு வீரர்கள் பயன்படுத்திய உபகரணங்கள், திட்டமிடப்பட்ட வரைபடங்கள் ஆகியவற்றை வைத்து அருங்காட்சியகம் அமைக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக தாய்லாந்து அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஆனால், தாய்லாந்துப் பிரதமர் பிரவுத் சான்-ஓச்சா, இனி அந்த குகையின் உள்ளே மற்றும் வெளியே மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட சம்பவங்களைத் திரைப்படமாக எடுக்க முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதை ரூ.400 கோடி செலவில் ஹாலிவுட் நிறுவனங்கள் படமாகத் தயாரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Trending Articles

Sponsored