பாகிஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் குண்டுவெடிப்பு...! 90 பேர் பலிSponsoredபாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தலும், மாகாணங்களுக்கானத் தேர்தலும் வரும் 25-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி அந்நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் பிரசாரங்களின்போது ஆங்காங்கே வன்முறையும் வெடிக்கின்றன. சமீபத்தில், தேர்தல் கூட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் வேட்பாளர் ஒருவர் இறந்தார். இந்நிலையில், இன்றைய பிரசாரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 90 பேர் பலியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தானின் மஸ்டங் மாவட்டத்தில் 'பலுசிஸ்தான் அவாமி கட்சி'யின் பேரணி மீது பயங்கரவாதிகள் இன்று வெடிகுண்டுத் தாக்குதலை நடத்தினர். பெரும் சத்தத்துடன் நடந்த குண்டுவெடிப்பில் அத்தொகுதியின் வேட்பாளர் சிராஜ் ரைசானி உடல் சிதறி பலியானார். தொடக்கத்தில் 33 பேர் வரை பலியாகியிருக்கலாம் எனத் தகவல் வெளியானது. தற்போது வந்துள்ள அறிவிப்பின்படி மொத்தம் 90 பேர் மரணமடைந்துள்ளனர். 180க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கப்படும் என அஞ்சப்படுகிறது. இந்தக் குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored