நவாஸ் ஷெரீஃப் மீதான வழக்கை சிறையில் வைத்து விசாரிக்க முடிவு!Sponsored நவாஸ் ஷெரீஃப்க்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃப், பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கு காரணமாக கடந்த வருடம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம் நவாஸ் ஷெரீஃப்க்கு10 ஆண்டுகளும் அவரின் மகள் மரியமுக்கு 7 ஆண்டுகளும் மருமகன் கேப்டன் சர்தாருக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Sponsored


இதற்கிடையில், உடல்நலக்குறைவால் லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் மனைவி குல்சூர் நவாஸைக் காண தனது மகளுடன் லண்டன் சென்றிருந்தார் நவாஸ். லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்பிய இருவரும் லாகூரில் வைத்து கைது செய்யப்பட்டனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் இஸ்லாமாபாத் கொண்டு செல்லப்பட்டவர்கள் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள்  ‘பி’ வகுப்பில் வைக்கப்பட்டுள்ளனர். சாதாரண சிறைக் கைதிகளைவிட ஏராளமான சலுகைகள் இவர்களுக்கு வழங்கப்படும். குளிர்சாதன வசதிகள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகள் ஆகியவற்றை தங்களது சொந்த செலவில் வைத்துக்கொள்ளலாம்.

Sponsored


அவர் மீது நிலுவையில் உள்ள இதர வழக்குகளை அடியாலா சிறையில் வைத்தே விசாரிக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டின் சட்டம் மற்றும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அவென்பீல்டு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவரின் வழக்கறிஞர் கவாஜா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.Trending Articles

Sponsored