கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ப்ரோப்போஸ் செய்த இளைஞர்; கட்டியணைத்து சம்மதம் சொன்ன பெண்..! நேரலையில் ரசித்த உலகம்Sponsoredஇந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் மைதானத்தில் மேட்ச் பார்த்துக்கொண்டிருந்த பெண்ணிடம் ஆண் ஒருவர்,  திருமணம் செய்துகொள்ள ஒப்புதல் கேட்டார். பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தது. அப்போது, திடீரென கேமரா, ஸ்டேடியத்தை நோக்கி போக்கஸ் செய்தது. அப்போது, ஆண் ஒருவர் திடீரென்று அருகில் இருந்த பெண் ஒருவருக்கு முட்டிப் போட்டு மோதிரத்தை பரிசளித்து திருமணத்துக்கு ஒப்புதல் கேட்டார்.

Sponsored


Sponsored


அந்த நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பாகும்போது, அந்த ஆண், பெண்ணிடம் மோதிரத்தை வழங்கிய சில விநாடிகள், அந்தப் பெண் ஆச்சர்யத்தில் யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது, மூன்றாவது நடுவரின் முடிவுக்கு காத்திருக்கும்போது ஒளிபரப்பப்படும் decision pending என ஒளிபரப்பப்படுகிறது. அவர்களைச் சுற்றியிருந்த பார்வையாளர்கள், கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள். சிறிது நேரம் யோசித்த அந்தப் பெண், அவருக்கு சம்மதம் தெரிவித்து கட்டியணைக்கிறார். இந்த நிகழ்வுகளை நேரலையில் உலகமே கண்டு ரசித்தது. தற்போது, அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. Trending Articles

Sponsored