குகையில் சிக்கிய 3 சிறுவர்களுக்குக் குடியுரிமை! - தாய்லாந்து அரசு ஆலோசனைSponsoredதாய்லாந்து குகையில் சிக்கிய மூன்று சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் ஆகிய நான்கு பேருக்கு குடியுரிமை வழங்க அந்நாட்டு அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. 

தாய்லாந்தில் உள்ள  தி தம் லுஅங் என்ற குகையில் கடந்த ஜூன் 23-ம் தேதி கால்பந்தாட்ட சிறுவர்கள் 12 பேர் மற்றும் அவர்களின் பயிற்சியாளர் என மொத்தம் 13 பேர் சென்றுள்ளனர். அப்போது பெய்த கனமழையினால் அவர்கள் அனைவரும் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். பின்னர் பல நூறு மீட்பு படையினர், சுமார் 18 நாள்கள் போராட்டத்துக்கு பிறகு அனைவரையும்  மீட்டனர் என்பது அனைவரும் அறிந்ததே.   குகையில் சிக்கியவர்களின் நான்கு பேருக்கு தாய்லாந்தின் குடியுரிமை இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. 

Sponsored


சிறுவர்கள் போர்ன்சாய் கம்லுஆங், அதுல் சாம்,மாங்கோல் பூன்பியன் மற்றும் பயிற்சியாளர்  எக்போல் சாண்டவாங் ஆகியோர் வடக்கு தாய்லாந்து பகுதி மற்றும் மியான்மர்-தாய்லாந்து எல்லை பகுதியில் இருந்தவர்கள். அவர்களுக்கென சொந்த நகரம் கிடையாது. எனவே இவர்களை நிலையற்றவர்கள் என அழைப்பர். தாய்லாந்து சட்டத்தின் படி இவர்கள் குடியுரிமை பெற்றவர்களாகக் கருதப்படமாட்டார்கள்.  எனவே அந்த அணியில் இருக்கும்  மற்ற சிறுவர்களை போல் இந்த மூன்று சிறுவர்களாலும் சுதந்திரமாக இருக்க முடியாது. குடியுரிமை இல்லாதவர்களுக்கு தாய்லாந்து அரசு ஒரு அடையாள அட்டை வழங்கும். இத்தனை நாள்களாக இந்த மூன்று சிறுவர்களும் அதைத் தான் பயன்படுத்தி வந்துள்ளனர். அடையாள அட்டையின்  மூலம் சில சலுகைகள் மட்டுமே பெற முடியும். ஆனால் பயிற்சியாளருக்கு எந்தவித சட்டப்பூர்வமான அனுமதியும் இல்லை இவரால் எந்த பொது சலுகைகளையும் கூட பெற முடியாது. 

Sponsored


PHoto Credits: facebook.com/talesofaneducateddebutante

இந்நிலையில் தாய்லாந்து உள்துறை அமைச்சகம் இந்த நால்வருக்கும் குடியுரிமை வழங்க ஆலோசனை செய்து வருவதாக, அந்நாட்டு  பதிவுச் செயலகத்தின்  இயக்குநர் வீனஸ்  சர்சுக் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “ தற்போது சிறுவர்களின் பிறந்த சான்றிதழ், மற்ற ஆவணங்கள், எந்த வகையில் அவர்களுக்கு தாய்லாந்து சொந்த நாடு போன்ற விசயங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அனைத்தும் சரிபார்த்த பிறகு சிறுவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். அனைத்து அரசு முறை நடவடிக்கைகளும் முடிந்த பிறகு 6 மாதத்துக்கும் குடியுரிமை வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து நடவடிக்கைகளும் தாய்லாந்து சட்டத்தின் படியே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்கள் சட்டரீதியாக தாய்லாந்துக்குள் நுழைந்திருந்தால், அவர்களின் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தால் நிச்சயம் சிறுவர்களுக்கு குடியுரிமை கிடைக்கும் எனவும் கூறியுள்ளார்.                   Trending Articles

Sponsored