சிறைத் தண்டனையை எதிர்த்து இன்று நவாஸ் ஷெரீஃப் மேல்முறையீடு!



ழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் மரியம் சார்பில் இன்று  (16-7-18) மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்படுகிறது என அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். 

Sponsored


பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃப், பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் கடந்த வருடம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மேலும், அந்த ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தவும், அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஊழல் வழக்கில், நவாஸ் ஷெரீஃப், அவரின் மகள் மர்யம், மருமகன் கேப்டன் சஃப்தார் ஆகியோர் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Sponsored


இதுதொடர்பான வழக்கின் விசாரணையில் நீதிபதி முகமது பஷீரின் அமர்வு, ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் அவர்களுக்குத் தீர்ப்பு வழங்கியது. நவாஸ் ஷெரீஃப்புக்கு 10 ஆண்டுச் சிறையும் 8 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் 65 கோடி ரூபாய்) அபராதமும், நவாஸ் ஷெரீஃப்பின் மகள் மர்யமுக்கு ஏழு ஆண்டுச் சிறையும் 2 மில்லியன் யூரோ (16 கோடி ரூபாய்) அபராதமும் விதிக்கப்பட்டது. மர்யமின் கணவரான கேப்டன் சஃப்தாருக்கு ஓர் ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நவாஸ் ஷெரீஃப்பின் மனைவி குல்சூர் நவாஸைச் சந்திப்பதற்காக நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரின் மகள் மர்யம் லண்டன் சென்றிருந்தனர். லண்டனிலிருந்து விமானம் மூலம் அபுதாபி சென்ற அவர்கள், பின்பு பாகிஸ்தான் வந்தபோது போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Sponsored


இந்நிலையில், ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிறையில் இருக்கும் மூன்று பேரின் சார்பிலும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் இன்று (16-7-18) அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக நவாஸ் ஷெரீஃப்பின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, நேற்று அடிடாலா சிறைக்குச் சென்ற காவாஜா ஹாரிஸ் தலைமையிலான வழக்கறிஞர்கள் முறையீட்டு மனுக்களில் தங்களது கட்சிக்காரர்களின் கையொப்பங்களைப் பெற்றனர். 

இந்த நிலையில் நவாஸ் ஷெரீஃப் ஆதரவாளர்கள், ``சிறைத் தண்டனையை எதிர்த்து முறையீடு செய்வதுடன், நவாஸ் ஷெரீஃப் மீதுள்ள இதர ஊழல் வழக்குகளின் விசாரணையை அடிடாலா சிறை வளாகத்தில் நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்படும்'' என்று தெரிவித்துள்ளனர்.



Trending Articles

Sponsored