வீரர்களை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்த குரோஷிய அதிபர்! வைரலாகும் புகைப்படங்கள்உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் குரோஷியா நாட்டின் அதிபர் கோலின்டா கிராபர் கிடாரோவிக்(Kolinda Grabar-Kitarovic) கால்பந்து வீரர்களைக் கட்டியணைத்து வாழ்த்துச் சொன்ன புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன. 

Sponsored


உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள், ரஷ்யாவில் நடைபெற்று முடிந்தது. நேற்று, நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் குரோஷியா அணிகள் மோதின. அந்தப் போட்டியைப் பார்ப்பதற்கு இரு நாட்டு அதிபர்களும் மைதானத்துக்குச் சென்றிருந்தனர்.

Sponsored


Sponsored


குரோஷியா அதிபர் கோலிண்டா கிராபர் கிடாரோவிக், அந்நாட்டுக் கால்பந்து அணி வீரர்களுக்கான உடையையே அணிந்திருந்தார். போட்டியின் முடிவில் குரோஷியா அணி 4-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இருப்பினும், போட்டி முடிந்து வருத்தத்துடன் வந்த குரோஷியா வீரர்கள் ஒவ்வொருவரையும் கட்டியணைத்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். பிரான்ஸ் வீரர்களையும் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். அவர், கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.

முன்னதாக, போட்டி தொடங்குவதற்கு முன்பு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனும், குரோஷியா அதிபர் கோலிண்டாவும்  ஒருவொருக்கொருவர் கட்டியணைத்து வரவேற்றுக்கொண்டனர்.Trending Articles

Sponsored