ஒபாமா ஒருபக்கம்... பாட்டி மறுபக்கம்... சொந்தக் கிராமத்தில் நடனமாடி அசத்தல்!Sponsoredஆப்பிரிக்காவில் உள்ள தன் சொந்தக் கிராமத்துக்குச் சென்றிருந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, அங்கு தன் பாட்டியுடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Photo Credits/Twitter@GinaLawriw

Sponsored


கிழக்கு ஆப்பிரிக்கா, கென்யாவில் உள்ள கொகிலோ என்ற கிராமத்துக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று சென்றிருந்தார். இது, அவரின்  தந்தை பிறந்த இடமாகும். ஒபாமாவை நேரில் காண அந்தக் கிராமத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். அமெரிக்க அதிபர் பதவியை விட்டு விலகிய பிறகு, ஒபாமா முதல் முறையாக கென்யா சென்றுள்ளார். 

Sponsored


கொகிலோ கிராமத்தில் தன் சகோதரி அவுமா ஒபாமா ஆரம்பித்துள்ள இளைஞர் நலன்  மற்றும் விளையாட்டுப் பயிற்சி மையத்தைத் தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்பகுதி மக்களின் பாரம்பர்ய இசை  ஒளிபரப்பப்பட்டது. அதைக் கேட்ட உற்சாகத்தில் அமர்ந்திருந்த ஒபாமா, உடனே எழுந்து நடனமாடத் தொடங்கிவிட்டார். இதை, அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அந்த வீடியோவில், அவர் முதலில் நடனமாடத் தொடங்குகிறார். பிறகு, அவரது பாட்டியை அழைத்து நடனமாடச் செய்கிறார். இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. Trending Articles

Sponsored