இலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன்! Sponsoredமரண தண்டனைக்கான ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தால், இலங்கை பொருளாதார சலுகைகளை இழக்க வேண்டி இருக்கும் என ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளும், கனடா மற்றும் நார்வேவும் எச்சரிக்கை செய்துள்ளன. 

``போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் தேவையான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளப்படும்" என்று இலங்கை அதிபர் மைத்திரிபால ஶ்ரீசேனா கருத்து தெரிவித்திருந்தார்.

Sponsored


இதனை அடுத்து, கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதர அதிகாரிகள், இலங்கை அதிபர் மைத்திரிபால ஶ்ரீசேனாவுக்கு எழுதிய கடிதத்தில், `மரண தண்டனைக்கான ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வர இருப்பதாக தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது, கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக  இலங்கை மரணதண்டனை குறித்த ஒப்பந்தத்தைப் பின்பற்றி வரும் நிலையில், தற்போது அந்த ஒப்பந்தத்தை விட்டு விலகிச் செல்வது கவலை கொள்ள செய்கிறது.

Sponsored


மரணதண்டனையை நிறுத்தி வைக்க முடிவெடுக்கும் அதிபரின் அதிகாரத்தைத் தொடர்ந்து பின்பற்றவும், மரணதண்டனைக்கு எதிரான கொள்கையை இலங்கை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்" என்று வேண்டுகோள் வைத்துள்ளனர். ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகளின் அதிகாரிகள்,  இதே கருத்தை வலியுறுத்தியும், மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை மறுபரிசீலனை செய்யும்படி இலங்கை மனித உரிமைகள் ஆணையமும் அதிபர் ஶ்ரீசேனாவுக்கு  கடிதம் எழுதி இருக்கிறது. Trending Articles

Sponsored