சிறுமியைத் தூக்கிச்செல்ல முயலும் கழுகு! - நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோகிர்கிஸ்தான் நாட்டில், கழுகு வேட்டையின்போது 8 வயது சிறுமியை கோல்டன் கழுகு ஒன்று தூக்கிச்செல்லும் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ காட்சிகள், இணையத்தில் வெளியாகியுள்ளது.

Sponsored


மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் உள்ள இஸ்ஸிக்-குள் என்ற இடத்தில் நடைபெற்ற திருவிழாவின்போது, கழுகு வேட்டையாடும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. அப்போது, திறந்த வெளி மைதானத்தில் நடைபெற்ற வேட்டையில்,  8 வயது சிறுமியை கோல்டன் கழுகு ஒன்று துக்கிச்செல்லும் திகிலூட்டும் வீடியோ காட்சிகள், இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. 

Sponsored


வீடியோ தொடங்கும்போது, வானத்தில் எங்கோ பறந்துகொண்டிருக்கும் கழுகு மட்டும் தெரிகிறது. அடுத்த சில மணித்துளிகளில் சட்டென்று கீழிறங்கும் கழுகு, நேராக அங்கு நின்றுகொண்டிருந்த சிறுமியை நோக்கிச் சென்று, அவரைத் தூக்க முயற்சிக்கிறது. அந்தச் சிறுமி மிகவும் பயந்து கூச்சலிட்டுக்கொண்டே தரையில் அமர்ந்துவிடுகிறார். பிறகு, அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஓடிச்சென்று கழுகிடமிருந்து சிறுமியை மீட்கின்றனர். நெஞ்சைப் பதறவைக்கும் இந்தக் காட்சிகள், வீடியோவாகப் பதிவாகியுள்ளது.

Sponsored


உடனடியாக அந்தச் சிறுமி மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும்,  நிறையத் தையல் போடவேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. Trending Articles

Sponsored