ஆஃபர்களால் அல்ல, ஊழியர்களின் போராட்டத்தால் முடங்கிய அமேசான் இணையதளம்! Sponsoredஅமேசான் இணையதளம் முடங்கியதற்குக் காரணம், ஆஃபர்களால் ஈர்க்கப்பட்டு மக்கள் அதிக அளவில் இணையதளத்துக்குச் சென்றதால் அல்ல,  ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால்தான் எனத் தெரியவந்துள்ளது. 

இணையதளத்தில் ஆஃபர்களை அறிவித்து, பொருள்களைக் கூவிக்கூவி விற்றுவருகின்றன அமேசான் நிறுவனமும் ப்ளிப்கார்ட் நிறுவனமும். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, அமேசான் பிரைம் டே என்ற பெரிய அளவில் விற்பனையைத் தொடங்கியது அமேசான். ஆனால், முதல் நாளிலேயே இணையதளம் செயல்படாமல் முடங்கியது. இதற்குக் காரணம், பொதுமக்கள் பலரும் ஒரேநேரத்தில் பொருள்களை வாங்க முண்டியடித்ததால்தான் என்று சொல்லப்பட்டது. ஆனால், தன்னுடைய ஊழியர்களுக்கு சரியான முறையில் ஆரோக்கியமான பணியிடத்தை வழங்காததைக் கண்டித்து ஐரோப்பிய நாடுகளில் பணியாற்றும் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்திருப்பதால்தான், அமேசானின் இணையத்தளச் சேவை முடங்கியது என்பது பின்னர் தெரியவந்துள்ளது. 

Sponsored


Sponsored


ஐரோப்பாவில் ஸ்பெயினிலும், ஜெர்மனியிலும் 1800-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், ஆரோக்கியமான பணியிடம், ஊதிய உயர்வு மற்றும் ஊழியர்களுக்குத் தகுந்த மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அமேசான் பிரைம் டே விற்பனையும் ஸ்தம்பித்திருக்கிறது. 

இதை மறுத்துள்ள அமேசான் நிறுவனம், `ஊழியர்களுக்கு ஆரோக்கியமான பணியிடத்தை உருவாக்கவே உழைத்துவருகிறோம். அவர்களின் பிரச்னைகளைக் காதுகொடுத்துக் கேட்க எப்போதுமே தயாராக இருக்கிறோம். ஒரு சிலர் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான ஊழியர்கள் எந்தவித குறையுமின்றி பணி செய்துவருகிறார்கள்' என்று தெரிவித்துள்ளது.Trending Articles

Sponsored