இந்தியாவை மிஞ்சிய பாகிஸ்தான் - ஹெச்.ஐ.வி நோய் குறித்து ஐ.நா தகவல்!



இந்தியாவில் ஹெச்.ஐ.வி நோய் தொற்று உள்ளோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது என ஐ.நா அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

Sponsored


இந்தியாவில் 2010-ம் ஆண்டில் 1.2 லட்சம் பேர் புதிதாக ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த எண்ணிக்கை 2017-ம் ஆண்டில் 80 ஆயிரமாகக் குறைந்துவிட்டதாகவும், இதே காலகட்டத்தில், எய்ட்ஸ் நோய் தொடர்பான இறப்புகள், 1.60 லட்சத்திலிருந்து 69,000-மாகக் குறைந்துள்ளதாகவும், ஹெச்.ஐ.வி நோயுடன் வாழ்வோரின் எண்ணிக்கை 23 லட்சத்திலிருந்து 21 லட்சமாகக் குறைந்துவிட்டதாகவும் ஐ.நா அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. 

Sponsored


உலக அளவில் ஹெச்.ஐ.வி-யின் பாதிப்பு கடந்த ஏழு ஆண்டுகளில் 18 சதவிகிதம் குறைந்திருக்கிறது. அதாவது, 2010-ம் ஆண்டில் 2.2 மில்லியனாக இருந்த எண்ணிக்கை 2017-ம் ஆண்டில் 1.8 மில்லியனாகக் குறைந்திருக்கிறது. இந்த அறிக்கையில், இந்தியா, கம்போடியா, மியான்மர், தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் எய்ட்ஸ் நோயின் தாக்கம் குறைந்துவரும் வேளையில், பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஹெச்.ஐ.வி-யின் பரவல் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Sponsored


இந்தியாவில் அரசு எடுத்துவரும் தொடர் முயற்சிகள் காரணமாகவே, ஹெச்.ஐ.வி நோய்த் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்ததாகப் பாராட்டியிருக்கிறது ஐ.நா சபையின் அறிக்கை.



Trending Articles

Sponsored