ருவாண்டா அதிபருக்கு 200 பசுக்களைப் பரிசளிக்கும் மோடி!



Sponsored



ருவாண்டா அதிபர் பால் காகமேவுக்கு 200 பசுக்களைப் பரிசளிக்க உள்ளார் இந்திய பிரதமர் மோடி.

இந்திய பிரதமர் மோடி, நாளை மறுதினம் 5 நாள் பயணமாக ஆப்பிரிக்க நாடுகளுக்குச் செல்கிறார். அதன்படி முதல் நாடாக ருவாண்டா நாட்டுக்குச் செல்கிறார். பின்னர் உகாண்டா சென்று, அங்குள்ள பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார். பின்னர், தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், முதலாவதாக ருவாண்டா நாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் பால் காகமேயைச் சந்தித்து உரையாற்றுகிறார். பின்னர், அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். ருவாண்டா செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பதால், அவருக்கு பாரம்பர்ய முறையில் வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது.  

Sponsored


அதன்பின், ருவாண்டா நாட்டின் ரிவிரு கிராமத்துக்குச் செல்லும் மோடி, அந்நாட்டில் செயல்படுத்தப்பட்டுவரும் கிரிங்கா திட்டத்தின் கீழ் அதிபர் பால் காகமேவுக்கு 200 பசுக்களைப் பரிசளிக்க உள்ளார். இருநாடுகளுக்கிடையேயான நட்புறவை மேம்படுத்தும் விதமாக பரிசு அளிக்கப்படுகிறது. இந்த நிகழ்வு, முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இதுகுறித்துக் கூறிய வெளியுறவு அதிகாரிகள், ``பசுக்களைக் கொடுப்பது ஒரு பொருளாதாரப் பங்களிப்பு மட்டுமல்ல, இந்திய வம்சாவளியினரை நன்கு பராமரிப்பதற்காக ருவாண்டாவிற்கு இந்தியாவின் நன்றியுணர்வை வெளிப்படுத்த கொடுக்கப்படுகிறது" என்று கூறியுள்ளனர்.  ருவாண்டாவில், ஏழை மக்களுக்கு உதவும் வகையில், `ஒரு குடும்பத்துக்கு ஒரு பசு' என்கிற வகையில் கிரிங்கா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

Sponsored




Trending Articles

Sponsored