சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடாதீர்கள்..! ட்ரம்புக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான் அதிபர்



சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடாதீர்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானி எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

Sponsored


ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா விலகியது. இந்த விவகாரம் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையில்,  ஈரான் விவகாரம் குறித்துப் பேசிய அமெரிக்க அதிகாரி, 'ஈரான் நாட்டின் அணு சக்தி, தீவிரவாத சக்திகளுக்கு அந்நாடு உதவுவதைத் தடுக்கவும் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது' என்று தெரிவித்திருந்தார்.

Sponsored


இந்தநிலையில், இன்று ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானி தலைமையில் அந்நாட்டு அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ஹாசன் ரௌஹானி, 'ஈரானுடனான அமைதி, அமைதிக்கெல்லாம் தாயாக அமையும். ஈரானுடனான போர் போருக்கெல்லாம் தாயாக அமையும் என்பதை அமெரிக்கா தெரிந்து கொள்ளவேண்டும். ட்ரம்ப், நீங்கள் சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடிதீர்கள். அது உங்களை வருத்தப்படவைக்கும். ஈரான் நாட்டின் பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கு எதிராக ஈரானில் கிளர்ச்சியைத் தூண்டிவிடும் நிலையில் நீங்கள் இல்லை' என்று தெரிவித்துள்ளார். 

Sponsored




Trending Articles

Sponsored