உயிர் தப்பிய துணை அதிபர்! - 11 பேரின் உயிரைப் பறித்த தற்கொலைப் படை தாக்குதல்Sponsoredஆப்கானிஸ்தானில் விமானநிலையத்துக்கு அருகே நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Photo Credits/@PassionForNews

Sponsored


ஆப்கானிஸ்தான் நாட்டின் துணை அதிபர் அப்துல் ரஷ்த் டோஸ்டம் மீது போர் குற்றம் சுமத்தப்பட்டிருந்து. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் தலைமறைவாக இருந்துவந்தார். இந்நிலையில், நேற்று நாடு திரும்பிய அவரை வரவேற்க ஆப்கானிதான், காபூல் விமான நிலையத்தில் பல்வேறு அரசு அதிகாரிகள் திரண்டிருந்திருந்தனர். விமானநிலையத்தில் இருந்து வெளியே வந்த துணை அதிபர் பாதுகாப்புப் படையினருடன் தனது வாகனத்தில் ஏறி புறப்பட்டு விட்டார். 

Sponsored


அவர் புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் விமான நிலையத்துக்கு அருகே பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்தத் தாக்குதலில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துணை அதிபரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா என விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக ஆப்கானிஸ்தான் நாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Trending Articles

Sponsored