`வரலாற்றில் நிகழாத விளைவு நேரிடும்!' - ஈரான் அதிபருடன் மோதும் ட்ரம்ப்``மரணம் மற்றும் உங்களின் வன்முறை சிதைந்த வார்த்தைகளுக்கு முன் நிற்கும் நாடு அமெரிக்கா இல்லை'' என்று ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.  

Sponsored


ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா விலகியது. இந்த விவகாரம் உலகளவில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், அதிபர் ஹஸன் ரவுகானி தலைமையில் கடந்த 22-ம் தேதி அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், `ஈரானுடன் அமெரிக்கா போரிட்டால் இதுவரை நிகழ்ந்த போருக்கெல்லாம் தாய்ப் போராக இது அமையும். சிங்கத்தின் வாலைப் பிடித்து விடாதீர்கள்' என்று அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகப் பேசினார். 

Sponsored


இதற்கு, பதிலடி கொடுக்கும் விதமாக ட்ரம்ப் தன் ட்விட்டர் பக்கத்தில், `ஈரான் அதிபர் ஹஸன் ரவுஹானிக்கு: ஒருபோதும், எப்போதும் அமெரிக்காவை அச்சுறுத்த நினைக்காதீர். இல்லையெனில் வரலாற்றில் நிகழாத அளவுக்கு கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். மரணம் மற்றும் உங்களின் வன்முறை சிதைந்த வார்த்தைகளுக்கு முன் நிற்கும் நாடு அமெரிக்கா இல்லை. எச்சரிக்கையாக இருங்கள்' என நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

Sponsored
Trending Articles

Sponsored