ஆன்லைனில் விஷப்பாம்பு வாங்கி ஒயின் தயாரித்த சீனப் பெண்ணுக்கு நேர்ந்த கதி!Sponsoredபாரம்பர்ய பாம்பு ஒயின் தயாரிக்க சீனப் பெண் ஒருவர் முயன்று, விஷப் பாம்பிடம் கடிபட்டு இறந்துபோனார். 

சீனாவின் ஷான்க் ஷி மாகாணத்தைச் சேர்ந்த அந்தப் பெண், இ- காமர்ஸ் நிறுவனமான Zhuanzhuan -ல் விஷப்பாம்பு ஒன்றை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். இந்த நிறுவனமும் சிறிய பெட்டியில் விஷப் பாம்பை அனுப்பிவைத்துள்ளது. லோக்கல் கூரியர் வழியாக பாம்புப்பெட்டி டெலிவரி செய்யப்பட்டுள்ளது. பாம்பை வைத்து உடல்நிலை பாதித்த தாய்க்காக பாம்புஒயின் தயாரிக்க அவர் முயன்றுள்ளார். பாம்பை முழுமையாக ஒயினுக்குள் மூழ்கவிட்டு ஒயின் தயாரிப்பது, சீன மக்களின் வழக்கம். பாம்பை ஒயின் நிறைந்த பாட்டிலுக்குள் போட முயன்றபோது, அது தீண்டிவிட்டுத் தப்பியது. தகவல் அறிந்த வனத்துறையினர், வீட்டின் அருகே பதுங்கியிருந்த பாம்பைப் பிடித்தனர்.

Sponsored


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு 8 நாள்களாக சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று இறந்துபோனார். 21 வயது நிரம்பிய  பெண்ணின் பெயர், விவரம் வெளியிடப்படவில்லை. சீனாவில் விலங்கினங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யத் தடை உள்ளது. அலிபாபா போன்ற பெரிய நிறுவனங்கள், ஊர்வனங்களை ஆன்லைனில் விற்பதில்லை.Zhuanzhuan சிறிய நிறுவனங்கள் சட்டத்துக்குப் புறம்பாக இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடுகின்றன. 

Sponsored


இந்தத் தகவலை சீன செய்திநிறுவனம் ஜின்குவா வெளியிட்டுள்ளது.Trending Articles

Sponsored