விடுமுறை கொண்டாட்டத்தைக் கலங்கடித்த துப்பாக்கிச்சூடு... வாலிபர் நடத்திய வெறியாட்டத்தின் அதிர்ச்சி வீடியோSponsoredஇருவரின் உயிரைப் பலிகொண்ட டொரண்டோ துப்பாக்கிச்சூட்டு திடுக் சம்பவத்தின் வீடியோ காட்சிகள்  வெளியாகியுள்ளது.


 

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் கைது செய்யப்படுபவர்கள் பெரும்பாலானோர் மனநோயால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். அமெரிக்க மக்களிடையே  துப்பாக்கி பயன்பாட்டைத் குறைப்பதற்கான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்கின்றன. இதேபோன்று கனடாவிலும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 

கனடாவின் டொரன்டோ நகரில் டேன்ஃபோர்த் மற்றும் லொகன் அவென்யூக்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, விடுமுறை நாளை கொண்டாடிக்கொண்டிருந்தனர். திடீரென அந்த இடத்துக்கு வந்த அடையாளம் தெரியாத நபர், மக்கள் மத்தியில்  துப்பாக்கிச்சூடு நடத்தினார்.  இதில் அங்கும் இங்கும்  மக்கள் சிதறி ஓடினர். துப்பாக்கிச்சூட்டில் 22 வயது மதிக்கத்தக்கப் பெண், 10 வயது சிறுமி ஆகியோர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர்  படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தப்பிக்க முயன்றபோது போலீஸ் தாக்குதலில் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த நபரின் பெயர் ஃபைசல் ஹுசைன் என்று போலீஸார் அறிவித்துள்ளனர். ஃபைசலின் குடும்பத்தினரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் பல வருடங்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் அடையாளத்தைப் போலீஸார் வெளியிடவில்லை.

Sponsored 

Sponsored


இந்தநிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது பதிவான வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் சாலையில் நடந்து வரும், கறுப்பு நிற ஆடை, தொப்பி அணிந்திருக்கும் கேஷுவலாகத் தன் துப்பாக்கியை எடுத்து ரெஸ்டாரன்ட்டை நோக்கி சரமாரியாகச் சுடுகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

விடுமுறை கொண்டாட்டத்தின்போது நிகழ்ந்த இந்தக் கோர சம்பவம், கனடா மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன் டொரன்டோவில் பாதசாரிகள் மீது மர்ம நபர் ஒருவர், டிரக் மோதி விபத்து ஏற்படுத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. Trending Articles

Sponsored