பற்றி எரியும் ஏதென்ஸ் காட்டுத் தீ! - பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வுSponsoredஏதென்ஸ் காட்டுத் தீயில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. 


 

கிரீஸ் தலைநகர் ஏதென்ஸின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அமைந்திருக்கும் பைன் (Pine) மரக்காடுகளில் நேற்று மதியம் இரண்டு இடங்களில் மிகப்பெரிய காட்டுத் தீ ஏற்பட்டது. காட்டுப் பகுதிகளை ஒட்டியுள்ள சுற்றுலாப் பகுதிகள் வரை, தீ மளமளவென பரவியது. குடியிருப்புப் பகுதிகளும் எரிந்து நாசமாகின. இந்தக் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். வீடுகள், விடுதிகள், வாகனங்கள் என அனைத்துமே தீயில் கருகி நாசமாகின. இந்தத் தீ விபத்து க்ரீஸ் நாட்டையே புரட்டி போட்டுவிட்டது. 

Sponsored 

Sponsored


ஏதென்ஸ் நகரையொட்டியுள்ள கடற்கரை ஊர்களான மத்தி, ரஃபினா, கினேட்டா ஆகியவை பெருமளவிலான உயிர்ச் சேதத்தையும் பொருள் சேதத்தையும் சந்தித்துள்ளன. மத்தி என்னும் சுற்றுலாப் பகுதியிலிருந்து மக்கள், கப்பலில் மீட்கப்பட்டு வருகின்றனர். 300-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், ஐந்து விமானங்கள் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஏதென்ஸ் காட்டுப்பகுதியில் பலமான காற்று வீசி வருவதால் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் கிரீஸ் அரசு திணறி வருகிறது. கிரீஸ் நாட்டில் ஆங்காங்கே காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம். ஆனால், இதுபோன்று உக்கிரமாகக் காட்டுத் தீ பரவியது 2007-ம் ஆண்டுதான். அப்போது 60 பேர் பலியாகினர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏற்பட்டுள்ள இந்தக் காட்டுத் தீ கிரீஸ் மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கிவிட்டது. சில முக்கிய நெடுஞ்சாலைகள், ரயில் தடங்கள் மூடப்பட்டுவிட்டன.  இணையத்தில் பகிரப்பட்டு வரும் காட்டுத்தீ பரவும் வீடியோ காட்சிகள், புகைப்படங்கள் மனதைப் பதைபதைக்க வைக்கின்றன. Trending Articles

Sponsored