பாகிஸ்தானில் நாளை தேர்தல் - இம்ரான்கானுக்குப் பெருகும் கிரிக்கெட் வீரர்களின் ஆதரவு!



பாகிஸ்தானில் நாளை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரரும் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கானுக்கு, கிரிக்கெட் வீரர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

Sponsored


பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கும் சிந்து, பலுசிஸ்தான், பஞ்சாப், கைபர் ஆகிய 4 மாகாணங்களுக்கும் நாளை வாக்கு பதிவு நடைபெறுகிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை மொத்தம் 272 உறுப்பினர்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த தீவிர பிரசாரம் நேற்று இரவுடன் முடிவடைந்தது.

Sponsored


Sponsored


பாகிஸ்தான் பிரதமராக இருந்து வந்த, நவாஸ் ஷெரீஃப் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாகப் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஆதரவு குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதைப் பயன்படுத்தி தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதனிடையே இம்ரான்கானுக்கு கிரிக்கெட் வீரர்கள் பலர் தனது ஆதரவை அளித்துள்ளனர்.

இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் `1992-ல் உங்கள் தலைமையில் விளையாடி உலகக் கோப்பை வென்றோம். அதே போல நல்லதொரு ஜனநாயக நாட்டை உங்கள் தலைமையில் உருவாக்க முடியும்' என்று பதிவிட்டுள்ளார். இதே போல பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாகர் யூனிஸ் `உங்கள் நேர்மையை யாராலும் சந்தேகப்பட முடியாது. அந்த நேர்மைதான் நாட்டுக்குத் தேவை' என்று பதிவிட்டுள்ளார். இதே போல முன்னாள் ஆஸ்திரேலிய வீரர், டீன் ஜோன்ஸ் `நான் ஒன்றும் அரசியல்வாதியல்ல. அவருக்கு கீழ் விளையாட விரும்பினேன். நல்ல தலைவர். அவர் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் நன்றாக இருக்கும்' இவ்வாறு அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.



Trending Articles

Sponsored