ஜப்பானை வாட்டிவதைக்கும் வெப்பம் - 80 பேர் உயிரிழந்த சோகம்Sponsoredஜப்பானை வாட்டி வதைக்கும் கடுமையான வெப்பத்தால் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாடு அரசு அதிகாரபூர்வமாகத்  தெரிவித்துள்ளது. 

Photo Credits/@arabnews

Sponsored


ஜப்பானில் கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத வெப்பம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். கடுமையான வெப்பத்தால் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. ஜப்பானின் சில இடங்களில் 40 டிகிரி செல்ஸியஸ் (104F) வெப்பம் நிலவுவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த வெப்பத்தால் பள்ளிக் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஜப்பான் முழுவதும் கோடைக்கால விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அனைத்துப் பள்ளிகளிலும் ஏசி அமைக்க அரசு சார்பில் நிதிதர திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

Sponsored


இது குறித்துப் பேசிய அந்நாட்டின் அமைச்சரவைச் செயலாளர் யோஷிஹிடே சுகா, `` நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் வெப்பத்தின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களுக்காக அவசர நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” எனக் கூறியுள்ளார். அதிக வெப்பத்தால் அனைவரது வீட்டிலும் தொடர்ந்து ஏசி இயங்கிக்கொண்டே உள்ளது. இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக மின்சாரம் செலவாகிறது என பொது மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.Trending Articles

Sponsored