பாகிஸ்தான் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: இம்ரான் கான் முன்னிலை!



பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் இரவு 11 மணி நிலவரப்படி முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் கட்சி முன்னிலையில் உள்ளது. 

Sponsored


பாகிஸ்தானில் இன்று(25-07-2018) பொதுத் தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணி முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். தேர்தல் களத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் -ன் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ- இன்சாஃப் கட்சி, பிலவால் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவியது.

Sponsored


Sponsored


மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பாகிஸ்தானில் வாக்குச்சிட்டு முறையில் தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் முடிவுகள் தெரிய நாளை அதிகாலை ஆகலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு 11 மணி நிலவரப்படி முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ- இன்சாஃப் கட்சி 101 இடங்களில் முன்னிலையில் உள்ளது. நவாஸ் ஷெரீஃப் -ன் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 74 இடங்களிலும், பிலவால் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 38 இடங்களிலும் முன்னிலையில் உள்ளதாக அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தேர்தலுக்கு முந்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இம்ரான் கானுக்கு ஆதரவாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இம்ரான்கானின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் தங்கள் கட்சி முன்னிலையில் உள்ளதை கொண்டாடி வருகின்றனர்.



Trending Articles

Sponsored