சாப்பிடச் சென்ற ஹோட்டலில் பெண்ணுக்குப் பிரசவம்! குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்Sponsoredஅமெரிக்காவில் உணவகத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக உணவு வழங்கப்படும் என  உணவக நிர்வாகம் தெரிவித்துள்ளது.


``நாங்கள் உணவுகளை மட்டும் டெலிவரி செய்வதில்லை; குழந்தைகளை டெலிவரி செய்வதற்கும் உதவி செய்கிறோம்” என அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல உணவகம் ஒன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்தப் பதிவுக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் உள்ளது. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள இந்த உணவகத்தில் ஒரு பெண்ணுக்குப் பிரசவம் நடந்துள்ளது. 

Sponsored


இதுகுறித்து அந்தப்பெண்ணின் கணவர் ராபர்ட் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அன்று நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை விவரித்து எழுதியுள்ளார். ``என் மனைவி உணவகத்தின் ஓய்வறைக்குச் செல்வதாகச் சென்றார். நான் அவளின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். இந்நிலையில், அந்த அறையிலிருந்து எனது மனைவி கூச்சலிட்டால் அப்போது அங்கிருந்த பெண் ஊழியர் அங்கு விரைந்தார். நான் உள்ளே சென்று பார்த்தபோது கர்ப்பத்தில் இருந்த சிசுவின் தலை வெளியில் நன்றாகத் தெரிந்தது. இதனால் இதற்கு மேல் அங்கிருந்து செல்ல முடியாது என உணர்ந்தேன். மேலும் நேரம் 10.30-க்கு மேல் ஆகிவிட்டது.

இதனையடுத்து, எனது மனைவியிடம் குழந்தை நிலை குறித்து எதுவும் கூறவில்லை. நாம் ஒரு சிறப்பான விஷயத்தைச் செய்யப் போகிறோம். நீ எதற்கும் பதற்றப்படாமல் அமைதியாக இருக்க அறிவுறுத்தினேன். உணவகத்திலிருந்து ஒரு வெள்ளை நிறத் துண்டு அளித்தனர். எனது மனைவியின் வயிற்றைக் கையில் வைத்து அழுத்தக்கூறினேன். குழந்தை எவ்விதப் பிரச்னை இல்லாமல் பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருக்கின்றனர்'' என்று அந்தப்பதிவில் கூறியுள்ளார். மேலும், குழந்தை பிறந்து ஒருவாரம் ஆனதையும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவில் ஏராளமானோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Sponsored


உணவகத்தில் குழந்தை பிரசவித்த பிறகு அங்குள்ள மருத்துவமனையில் தாய் சேய் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் மருத்துவமனையின் பெயருக்குப் பதிலாக அந்த உணவகத்தின் பெயர் பதியப்பட்டுள்ளது. உணவகத்தில் குழந்தை பிறந்தது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது என கடந்த ஒரு வார நிகழ்வை தொடர்ச்சியாக ராபர்ட் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வருகிறார்.

அந்தப் பிரபல உணவகத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக உணவு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு வேலைவாய்ப்புக்கான உத்தரவாதத்தையும் நிறுவனம் வழங்கியுள்ளது.Trending Articles

Sponsored