ஈஃபிள் டவரின் கீழ் ஆட்டம் போட்ட பாப் பாடகி கைதுSponsoredஈஃபிள் டவரின் கீழ் அனுமதியின்றி நடனமாடிய பாப் பாடகி மற்றும் அவரது தோழி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Photo Credit: https://www.instagram.com/gerynikol/

Sponsored


பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாப் பாடகி கிரே நிக்கோல். இவர் தனது தோழியுடன் பிரான்ஸ் நாட்டிற்குச் சுற்றுலா சென்றுள்ளார். உலகப் புகழ் பெற்ற ஈஃபிள் கோபுரத்திற்கு  சென்ற அவர்கள் உற்சாக மிகுதியில்  சாலையின் நடுவே நடனமாடினர். இரு புறங்களிலும் வாகனங்கள் செல்ல இருவரும் தங்களது நடனத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர். இந்தக்காட்சிகளை கிரே நிக்கோல் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். 

Sponsored


இதுதொடர்பாக காவல்துறை தரப்பில், கிரே நிக்கோல் மற்றும் அவரின் தோழி ஆகிய இருவரும் சாலையின் நடுவே அனுமதியின்றி நடனமாடி பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக செயல்பட்டதால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது. 

இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சிலர் இவர்களை வசைபாடியுள்ளனர். சிலர் விளையாட்டுத்தனமாக செய்துள்ளனர் என ஆதரவு குரலும் எழுப்பி வருகின்றனர்.Trending Articles

Sponsored