காதலர்களை புகைப்படம் எடுத்த போட்டோகிராஃபருக்கு நேர்ந்த துயரம்!ஜிபான் அகமது எடுத்துள்ள புகைப்படம், தற்போது ஃபேஸ்புக்கில் வைரலாகிவருகிறது. இதனால், பாராட்டு மழையில் நனைந்த ஜிபான், அந்த ஒரு புகைப்படத்தை எடுத்ததற்காக சக கலைஞர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். 

Sponsored


வங்கதேசத்தைச் சேர்ந்தவர் ஜிபான் அகமது. சிறுவயதில் கேமராமீது கொண்ட காதலால், புகைப்படக் கலைஞராகத் தன் பாதையை அமைத்துக்கொண்டார். இந்த நிலையில், தன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு போட்டோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். ``ஆசீர்வதிக்கப்பட்ட மழையின் கவிதை இது'' என்ற கேப்ஷனுடன், சில்லென்று கொட்டும் மழையில் டீ கடையின் பின்புறத்தில் ஒருவர் குடையைப் பிடித்தபடி மொபைல் போனை பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் அருகில், காதலர்கள் முத்தமிட்டுக்கொண்டிருக்கின்றனர். எதிர்பாராமல் தான் எடுத்த இந்தப் புகைப்படத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட சில நொடிகளில் வைரலானது.
 
டாக்கா பல்கலைக்கழக வளாகத்தின் பின்னால் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தை சிலபேர் 'அழகிய படம்' என்று பாராட்டினர்.  அதே நேரத்தில், அரசியல் ரீதியாகவும் இந்தப் புகைப்படம் பேசப்பட்டது.  அதனால், எதிர்ப்பு மற்றும் வன்முறைகள் கடந்த சில தினங்களாக வெடித்துவருகின்றன. பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர்கள், ஜிபான் அகமதுவை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதற்கு, உதவியாக இந்த இரண்டு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஜிபான் பணிபுரிந்து வந்த நிறுவனம் அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored