`தீவிரவாதத்தை ஒடுக்க நடவடிக்கை எடுங்கள்!’ - பாகிஸ்தானின் புதிய அரசுக்கு இந்தியா வாழ்த்து



Sponsored



பாகிஸ்தானில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசு, தெற்காசியப் பிராந்தியத்தைத் தீவிரவாதமற்ற பகுதியாக மாற்றுவதை நோக்கி உழைக்கும் என நம்புவதாக இந்தியா தெரிவித்துள்ளது. 

Photo Credit: ANI

Sponsored


பாகிஸ்தானின் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் கடந்த 25ம் தேதி நடைபெற்றது. இதில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சி போட்டியிட்ட 270 தொகுதிகளில் 116 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. பெரும்பான்மைக்கு 137 தொகுதிகள் தேவை என்ற நிலையில், கூட்டணி ஆட்சியமைக்க இம்ரான் கான் முயற்சித்து வருகிறார். வெற்றிக்குப் பின்னர் பேசிய இம்ரான் கான், இந்தியாவுடன் நட்புறவையே பேண விரும்புவதாகவும், ஜம்மு காஷ்மீர் பிரச்னைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். 

Sponsored


இந்தநிலையில், பாகிஸ்தான் தேர்தல் குறித்து இந்தியா கருத்துத் தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாக வெளியுறவுத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ``பாகிஸ்தான் மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து அளித்துள்ள தீர்ப்பை இந்தியா வரவேற்கிறது. அண்டை நாடுகளுடன் சமாதானமான உறவைப் பேணும் நாடாக பாகிஸ்தான் இருப்பதையே இந்தியா விரும்புகிறது. தெற்காசியப் பிராந்தியத்தில் வன்முறை மற்றும் தீவிரவாதம் இல்லா நிலையை நோக்கிக் கொண்டுசெல்லத் தேவையான ஆக்கபூர்வமான முயற்சிகளை பாகிஸ்தானின் புதிய அரசு எடுக்கும் என நம்புகிறோம்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Trending Articles

Sponsored