`அமெரிக்க அதிபராக அமர வேண்டும்...!' - 15 வயதில் பட்டம் பெற்ற சிறுவனின் லட்சியம்Sponsored12 வயதில் பயோ மெடிக்கல் பிரிவில் பொறியியல் படிப்பைத் தொடங்கிய தனிஷ்க் ஆபிரகாம், தனது கல்வி பயணத்தில் மற்றொரு மைல்கல்லை நிர்ணயித்துள்ளார். சர்வதேச ஊடகங்களின் கவனத்தை 2015-ல் தன் பக்கம் திருப்பிய இவர், தற்போது ஆராய்ச்சி படிப்பை தொடங்க உள்ளார்.

Photo Credit - facebook/Tanishq Abraham

Sponsored


அமெரிக்கா, கலிபோர்னியா மாகாணம் சேக்ரமெண்டோவில் 2003-ம் ஆண்டு பிறந்தவர் தனிஷ்க் ஆபிரகாம். இவரது தந்தை பிஜூ ஆபிரகாம் மென் பொறியாளராக பணியாற்றுகிறார். அம்மா தஜி ஆபிரகாம் கால்நடை மருத்துவராக உள்ளார். கேரளாவில் இருந்து கலிபோர்னியாவில் குடிபெயர்ந்தவர்கள். சிறுவயதில் இருந்தே தனிஷ்க்கு புத்தகம் படிப்பது, எழுதுவது, படித்தவற்றை திரும்ப சொல்லிப் பார்ப்பது என படிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். 

Sponsored


கல்வியில் கொண்ட காதல், அவரை அடுத்தடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. இந்த நிலையில் தனது 11-வது வயதில் கலிபோர்னியா கல்லூரியில் மே 20, 2015-ல் பட்டம் பெற்றார். இளம் வயதில் பட்டப்படிப்பை முடித்த தனிஷ்க்கு பாராட்டுகள் குவிந்தன. அன்றைய தலைப்புச் செய்தியும் அவர்தான். அதன்பிறகு, டேவிஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பயோ-மெடிக்கள் பிரிவில் பொறியியல் படிப்பைத் தொடர்ந்தார். இந்நிலையில், கடந்த தந்தையர் தினத்தில் பொறியியல் படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார். இதனால், தந்தை, தாய், சகோதரி, தாத்தா பாட்டி என குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சியில் பூரித்து இருக்கின்றனர். 

Photo Credit - facebook/Tanishq Abraham

`இறுதியாண்டு கல்லூரி படிப்பின்போது 3-4 மணி நேரம்தான் தனிஷ்க் ஆபிரகாம் தூங்கினான். `எதற்காக இவன் இப்படி இரவுமுழுவதும் படிக்கிறான்' என்று இவனது வகுப்பைச் சேர்ந்த 22 வயதுடைய நண்பர்கள் சில சமயங்கள் நிச்சயம் யோசித்திருப்பார்கள். தந்தையர் தினத்தில் பட்டம் பெற்று என் கணவருக்கு சிறந்த பரிசினை தந்துள்ளான்' என தஜி ஆபிரகாம் கூறினார். 

அடுத்தது என்ன? என்ற கேள்வியை தனிஷ்க் ஆபிரகானிடம் கேட்டதற்கு, `ஆராய்ச்சி படிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளேன். இருப்பினும், எனது வாழ்நாள் லட்சியமே அமெரிக்காவின் அதிபராக அமர்வதுதான்' என்றார் தன்நம்பிக்கையுடன். இன்றைய மாணவர்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் தனிஷ்க் ஆபிரகாமிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. Trending Articles

Sponsored