நவாஸ் ஷெரீஃப்பை சிறையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றவுள்ளதாக தகவல்Sponsoredபாகிஸ்தான் சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃப், பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் கடந்த வருடம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் நடைப்பெற்றது. இந்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகளும், அவரது மகள் மரியமுக்கு 7ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.கடந்த ஜூலை 13-ம் தேதி லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்பிய போது விமான நிலையத்தில் வைத்து அவரும் அவரது மகளும் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் இஸ்லாமாபாத் கொண்டு செல்லப்பட்டவர்கள்,அங்குள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டனர். அவருக்கு பல்வேறு நோய்கள் இருப்பதால் சிறையில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

Sponsored


இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன், நவாஸ் ஷெரீஃப்புக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவரின் சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில் உள்ளதாகவும் அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும் என சிறைத்துறை பரிந்துரைத்துள்ளதாக செய்தி வெளியானது.

Sponsored


இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக நவாஸ் ஷெரீஃப் அடியாலா சிறையில் இருந்து பாகிஸ்தான் மருத்துவ கல்லூரிக்கு மாற்றப்படவுள்ளதாக பாகிஸ்தான் ஊடகம்  தற்போது செய்தி வெளியிட்டுள்ளது. நெஞ்சு வலிப்பதாக கூறியதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதனையடுத்து அவரை சிசியூ-வில் உடனடியாக அனுமதிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது. சிறையில் அதற்கான வசதிகள் இல்லாததால் பாகிஸ்தான் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனைக்கு மாற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.Trending Articles

Sponsored