`15 வயதில் பொறியியல் பட்டம்; அடுத்தது பி.ஹெச்டி' - அசத்தும் இந்திய வம்சாவளி சிறுவன்!Sponsoredஅமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்வாசவாளியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். 

கேரள மாநிலத்தைப் பூர்வீகமாக கொண்ட பிஜூ ஆப்ரஹாம், தாஜி தம்பதி அமெரிக்காவில் வசித்துவருகின்றனர். தாஜி கால்நடை மருத்துவராகவும், பிஜூ ஆப்ரஹாம் சாஃப்ட்வேர் இன்ஜினீயராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இத்தம்பதியினருக்கு 15 வயதில் தனிஷிக் ஆப்ரஹாம் என்ற மகன் உள்ளார். தனிஷிக் சிறுவயது முதலே கல்வியில் சிறந்து விளங்கியவர். இதனால் வயதைத் தாண்டிய அறிவுத்திறமையின் காரணமாக பல்வேறு போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்கினார். மேலும், தனது 11 வயதிலேயே பல்கலைக்கழகத்தில் சேர்ந்த இவர் தற்போது பொறியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். 

Sponsored


ஆம், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பயோ மெடிக்கல் இன்ஜினீயரிங் பிரிவில் தனிஷிக் பட்டம் பெற்றுள்ளார். இதேபோல், தீ விபத்தில் பாதிக்கப்படும் நோயாளிகளின் இதயத்துடிப்பை கண்டறியும் முறையையும் தனது ஆய்வில் கண்டுபிடித்து அசத்தியுள்ளார். இதனால் அவரின் பெற்றோர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இவரது சாதனை குறித்து சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. இதற்கிடையே, தனிஷிக் தற்போது பி.ஹெச்டி படிப்பு பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Sponsored
Trending Articles

Sponsored