திடீர் நிலநடுக்கம்! எரிமலை சரிவில் சிக்கிக்கொண்ட சுற்றுலாப் பயணிகள்Sponsoredஇந்தோனேசியா, லாம்பாக் தீவில் உள்ள ரிஞ்சனி எரிமலை சரிவில், 100-க்கும் அதிகமாக மலையேற்ற வீரர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Photo Credit -Sutopo Purwo Nugroho

Sponsored


இந்தோனேசியாவின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான லாம்பாக் தீவில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகிய நிலநடுக்கத்தால் அதிகளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து முழுமூச்சில் நடைபெற்று வருகின்றன. 

Sponsored


இந்நிலையில், பேரிடர் மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுடோபோ புரவ் நுகரோ (Sutopo Purwo Nugroho) தன் ட்விட்டர் பக்கத்தில், `லாம்பாக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், தீவில் உள்ள ரிஞ்சனி எரிமலை சரிவில் 820 பேர் சிக்கியுள்ளனர். இவர்களில், 617 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த இவர்களில் 246 பேர் தப்பித்து வெளியேறிவிட்டனர். மற்றவர்கள் அங்கேயே உள்ளனர். அவர்களை மீட்க வேண்டும்' என பதிவு செய்திருந்தார். மேலும், நிலநடுக்கத்தால் மலையை விட்டு வெளியே செல்லும் இரண்டு பாதைகள் சேதமடைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, மலையேற்ற வீரர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. 2 ஹெலிகாப்டர்கள் அங்கே விரைந்துள்ளன. மீட்புக் குழுவினர் வெளியிட்ட தகவலில், `மலைப்பகுதியில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரிஞ்சனி எரிமலைச் சரிவில் உள்ள செம்பழுன் (Sembalun) வழியே அவர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்' எனப் பேரிடர் மேலாண்மை அமைப்பின் அதிகாரி தெரிவித்தார்.Trending Articles

Sponsored