கல்விக்காக வருத்திக்கொள்ளும் பெற்றோர்கள்! - முதலிடத்தில் இந்தியாSponsoredஇந்தியப் பெற்றோர்கள், தம் குழந்தைகளின் கல்விக்காகத் தங்களின் விடுமுறைகளைத் தியாகம்செய்து, கூடுதல் நேரம் பணி  செய்வதாக ஓர் ஆய்வு தெரிவித்துள்ளது.

ஹெச்.எஸ்.பி.சி (HSBC) நிறுவனம், உலகம் முழுவதும் 10 ஆயிரம் பெற்றோர்கள் மற்றும் 1500 மாணவர்களிடம் ஒரு சர்வே நடத்தியது.  அதில், 84 சதவிகித பெற்றோர்கள் தங்களது வருமானத்தை குழந்தைகளின் பல்கலைக்கழக கல்விக்காகச் செல்விடுவதாக தெரியவந்துள்ளது.  இதில் 41 சதவிகிதம் பேர், குழந்தைகளுக்காகத் தனியாக எந்த நிதியும் சேமித்துவைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. நிதிச்சுமை மற்றும் நீண்ட கால திட்டமிடுதல் இல்லாததால், நிறையப் பெற்றோர்கள், தங்களது தனிப்பட்ட சில விஷயங்களைத் தியாகம்செய்து, குழந்தைகளின் கல்விக்கு உதவுவதாக இந்த ஆய்வு கூறுகிறது. 

Sponsored


இதில் 60 சதவிகித இந்தியப் பெற்றோர்கள், தம் குழந்தைகளின் பல்கலைக்கழக கல்விக்காக உணவுப் பழக்கங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவற்றைக் குறைத்துக்கொள்வதாகக் கூறப்படுகிறது. இதில் 59 சதவிகித பெற்றோர்கள், குறைந்த நாள்களே விடுப்பு எடுப்பதாகவும், 49 சதவிகித பெற்றோர்கள் கூடுதலான நேரம் பணி செய்வதாகவும், சிலர் இரண்டு பணிகளை மேற்கொண்டு, குழந்தைகளின் கல்வியைப் பூர்த்திசெய்வதாகத்  தெரியவந்துள்ளது. இந்தியப் பெற்றோர்கள், சராசரியாக 5560 டாலர் ( இந்திய மதிப்பில் 3,80,000) குழந்தைகளின் கல்விக்காகச் செலவிடுவது தெரியவந்துள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored