`இத்தனை பெரிய பேரிழப்பா?' - அரசப் பெங்குயின் அழிவால் விஞ்ஞானிகள் அதிர்ச்சிSponsoredஅரசப் பெங்குயின் இனம் கடந்த 30 ஆண்டுகளில் 90% அழிந்துவிட்டதாக விஞ்ஞானிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.   


 

`அரசப் பென்குயின்’ என்பது பென்குயின் இனங்களிலேயே இரண்டாவது பெரிய பென்குயின் ஆகும். 3 அடி உயரமுள்ள இவை அண்டார்டிக்காவுக்கு அருகிலுள்ள தீவுகளில்தான் அதிகம் காணப்படுகின்றன. ஏறக்குறைய 2 மில்லியன் பென்குயின்கள் அந்தத் தீவில் உள்ளதாகக் கூறப்பட்டது.

அண்மையில் ஆப்பிரிக்காவுக்கும் அண்டார்டிக்காவுக்கும் மத்தியில் இருக்கும் தீவுகளில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பென்குயின் இனப்பெருக்கம் குறித்து செயற்கைக்கோள் தகவல்கள் மற்றும் ஹெலிகாப்டரில் எடுத்த புகைப்படங்கள் வாயிலாக ஆய்வு நடத்தினர். செயற்கைக்கோள் புகைப்படங்கள் விஞ்ஞானிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காரணம் தீவு முழுவதும் ஆட்கொண்டிருந்த அரசப் பென்குயின்களின் எண்ணிக்கை பலமடங்காகக் குறைந்திருந்தது. இரண்டு மில்லியனாக இருந்த பென்குயின்களின் எண்ணிக்கை, 2 லட்சம் அளவுக்குக் குறைந்திருந்தது.

Sponsored 

Sponsored


 `கடந்த 30 ஆண்டுகளில் அரசப் பென்குயின் இனம் இத்தனை பெரிய பேரிழப்பைச் சந்திக்கும் என எதிர்பார்க்கவில்லை’ என்று சூழலியல் வல்லுநர் தெரிவித்துள்ளனர். முக்கியமாக 1997-ம் ஆண்டு ஏற்பட்ட எல் நினோ என்னும் வானிலை நிகழ்வால் பென்குயின் இனம் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது. புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றம், நோய்த் தொற்று உள்ளிட்ட காரணங்களால் அரசப் பென்குயின்கள் அழிந்து வருவதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த ஆய்வு குறித்த விரிவான கட்டுரை அண்டார்டிக் சயின்ஸ் என்னும் அறிவியல் சார்ந்த இதழில் வெளியாகியுள்ளது. 
 Trending Articles

Sponsored