சாலையில் நின்று ரெஸ்யூம் கொடுத்த வாலிபர்! - கூகுள், நெட்பிளிக்ஸ் வழங்கிய வேலைவாய்ப்புஅமெரிக்காவின் சிலிக்கான் வேலி பகுதியில் சாலையில் நின்று வேலைக்காக ரெஸ்யூம் வழங்கியவருக்கு கூகுள், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட பெரும் நிறுவனங்களிலிருந்து வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. 

Sponsored


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சிலிக்கான் வேலி பகுதியைச் சேர்ந்தவர் டேவிட். இவர், வேலைக்காக சாலையில் நின்று ரெஸ்யூம் வழங்கியுள்ளார். மேலும், 'வீடு இல்லை. வெற்றிக்காக பசியாக இருக்கிறேன். என் ரெஸ்யூமை எடுத்துக்கொள்ளுங்கள்' என்ற வாசகம் கொண்ட தட்டியை வைத்துக்கொண்டு நின்றார். அதைப் பார்த்த ஃபுல்மேக்அப் அல்கெமிஸ்ட் என்பவர் டேவிட்டின் ரெஸ்யூம் மற்றும் டேவிட்டின் புகைப்படத்தைப் பதிவிட்டார். மேலும், டேவிட் வேலைக்காக கஷ்டப்படும் விவரத்தையும் பதிவிட்டிருந்தார். அவருடைய ட்விட்டர் பதிவை 50 ஆயிரம் பேர் ரீ-ட்விட் செய்தனர். இதற்கிடையில் கூகுள், நெட்பிளிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் டேவிட்டுக்கு வேலை தருவதாக அறிவித்துள்ளன.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored