"அமெரிக்காவைப் பார்த்து பொறாமைப்படும் காலம் திரும்புகிறது!" - ட்ரம்ப்Sponsoredமெரிக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 27) அன்று அமெரிக்க வணிகத்துறை, இரண்டாவது காலாண்டிற்கான பொருளாதார அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டின் நிலவரப்படி அமெரிக்காவின் ஜி.டி.பி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, கடந்த நான்கு ஆண்டுகளின் அதிகபட்ச நிலையை எட்டியுள்ளது. 

மார்ச் மாத நிலவரப்படி $18234 பில்லியன் ஆக இருந்த ஜி.டி.பி $18507.2 பில்லியன் ஆகவும்  2.2 % ஆக இருந்த வளர்ச்சி விகிதம்  தற்பொழுது 4.1% ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டின் ஜி.டி.பி-யின் வளர்ச்சிக்கு தனிமனித நுகர்வு, இறக்குமதி அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை குறைந்தது போன்றவைக்  காரணங்களாகக் கூறப்பட்டுள்ளது. தனிமனித நுகர்வு 4 சதவிகிதமும், குடியிருப்பு அல்லாத முதலீடு 7 சதவிகிதமும், கூட்டாட்சி அரசாங்க செலவுகள் 3.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. எண்ணெயின் விலையேற்றமும் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் காரணம் எனப்படுகிறது.

மேலும், டொனால்டு ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தபின், அமெரிக்காவின் பொருளாதார நிலை 2005-லிருந்து 3% வளர்ச்சி விகிதத்தைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்குத் தக்கவைத்துக்கொண்டு இருக்கிறது. 

Sponsored


2016-ல் தேர்தல் பரப்புரையின் போது ஒபாமாவை பொருளாதார ரீதியாகக் கடுமையாக விமர்சித்த ட்ரம்ப், நான் ஆட்சிக்கு வந்தால் ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்தை நான்கு சதவிகிதமாக உயர்த்த திட்டமிட்டிருப்பதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Sponsored


நாட்டின் மொத்த ‘வர்த்தக பற்றாக்குறை' (trade deficit) பன்மடங்கு குறைந்து உள்ளதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். இதற்கு அவரது வெளிநாட்டு வர்த்தக கொள்கை மாற்றங்கள் பெரிதும் உதவி இருக்கிறது எனலாம்.

ஜி.டி.பி அதிகரித்தல் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். இது பலக்குறியீடுகளை நமக்கு உணர்த்துகின்றது. நாட்டின் வருமானமும், செலவும் அதிகரிப்பது ஒரு முக்கியக் குறியீடு. PPP (Purchasing Power Parity) அதிகரிப்பு நாட்டின் குடிமக்களின் பணப்பரிவர்த்தனைகள் அதிகரிக்கும். இதனால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியில் மாற்றங்கள் அதிகரிக்கும்.

இந்த நிலையை இரண்டாம் பாதி ஆண்டிலும் எதிர்ப்பார்க்க, இதே அளவு தனிமனித நுகர்வு செலவைத் தக்கவைத்துக்கொள்வது அவசியம். ஆனாலும் காலாண்டு நிலவரங்கள் நிலையற்றதன்மை உடையது. இந்த நிலை எப்போது வேண்டுமானாலும் மாறும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இது அபார வளர்ச்சி என ட்ரம்ப்பால் கூறப்பட்டாலும்,  ஒபாமாவின் ஆட்சியில் 7.8 % ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை, ட்ரம்ப்பின் 18 மாத ஆட்சிக்காலத்தில் 4% ஆகக்குறைந்துள்ளது. இது வரும் ஆண்டுகளின் வளர்ச்சிக்கு வித்திடும் என நம்பப்படுகிறது. 95% அமெரிக்க உற்பத்தியாளர்கள் இந்த வளர்ச்சி தங்கள் நிறுவனங்களுக்கு சாதகமாகவே இருக்கும் என நம்புவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

உலகமே நம்மை பார்த்து பொறாமைப்படும் நாட்கள் திரும்புகிறது என்று ட்ரம்ப் முழங்குகிறார். ஆனால், இவையெல்லாம் பொருளாதார வளர்ச்சிகள் தான். சமூக வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் மோசமாகிறதே. அமெரிக்க எல்லைகளில் குழந்தைகள் பிரிக்கப்படுவது, வெளிநாட்டவர் வேலைகளை விட்டும், நாட்டை விட்டும் வெளியேற்றப்படுவது, துப்பாக்கிச்சூடு எனக் கவலை தரும் விஷயங்கள் நிறைய உள்ளன. எல்லா நாடுகளிலும் பொருளாதாரம் வளர்கிறது என்று தலைவர்கள் கூறுவதை கேட்பது மகிழ்ச்சிதான் என்றாலும், அது ஒருசாராரின் வளர்ச்சியாகவே இருப்பதுதான் கவலை. இதை புரிந்து கொள்வாரா ட்ரம்ப்?Trending Articles

Sponsored