`நட்புக்களுக்கு மட்டுமே அழைப்பு...லீடர்களுக்கு அல்ல!’ - இம்ரான் கான் கட்சி அறிவிப்பு



பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான்கான், அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்கவுள்ளார். ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவை மிக எளிமையாக நடத்த உள்ளார். இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் அதிபர் மம்மூன் ஹூசைன் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. பதவியேற்பு விழாவுக்கு எந்த வெளிநாட்டு அதிபருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனாவின் அதிபர் ஜின் பிங்குக்குகூட அழைப்பு விடுக்கப்படவில்லை. 

Sponsored


இம்ரான்கானின் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் சுனில் கவாஸ்கர், கபில்தேவ் மற்றும் நவ்ஜோத் சித்து ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் ஸ்டார் அமீர்கானுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. சித்து, இம்ரான்கானின் அழைப்பை ஏற்று இஸ்லாமாபாத் செல்ல முடிவு எடுத்துள்ளார். ``இம்ரான்கான் நல்ல குணங்கள் நிறைந்த மனிதர். பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்து என்னை கௌரவப்படுத்தியுள்ளார். விளையாட்டு தடைகளை உடைக்கும் உறவுகளை வலுப்பெறச் செய்யும்'' என்று அவர்  தெரிவித்துள்ளார். 

Sponsored


''பாகிஸ்தான் நாட்டின் தேசிய நிகழ்வு இது என்பதால் வெளிநாட்டு அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை'' என்று பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்ஷாப் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஃபாவத் சவுத்ரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் இம்ரான் கான் கட்சி தனிப்பெரும்பான்மையான கட்சியாக உருவெடுத்தாலும் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், உதிரி கட்சிகளின் ஆதரவை பெற அவர் முயன்று வருகிறார். 

Sponsored


பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு 371 எம்.பி-க்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில், 271 பேர் நேரடியாக வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆட்சியமைக்க 137 எம்.பி-க்கள் ஆதரவு தேவை. 



Trending Articles

Sponsored