ஊழியர்கள் போராட்டம் எதிரொலி : மூடப்பட்டது ஈஃபிள் டவர்!Sponsoredஆன்லைன் முன்பதிவு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஈஃபிள் டவர் இன்று மூடப்பட்டது.

உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாத்தலங்களில் முக்கியமானது பாரிஸில் உள்ள ஈஃபிள் டவர். இங்கு ஏராளாமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகளால் ஏற்படும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். ஈஃபிள் டவரை பார்வையிட கடந்த மாதம் முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.  இதனால் சுற்றுலாப் பயணிகள் சிலர் முன்பதிவு செய்து, கோபுரத்தைப் பார்வையிட்டுச் செல்கின்றனர். அதேபோல திடீரென பாரிஸுக்கு வரும் பயணிகள், முன்பதிவுசெய்ய இயலாத காரணத்தினால் நேரடியாகவே வந்து டிக்கெட்டை பெற்றுச் செல்கின்றனர்.

Sponsored


இந்நிலையில், முன்பதிவு செய்த பயணிகளும் முன்பதிவு செய்யாமல் நேரடியாக வந்த பயணிகளும் ஒரேயடியாக திரண்டதால் புதன்கிழமை கடுமையான நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் ஊழியர்கள் அவதியடைந்தனர். இதற்கு ஆன்லைன் முன்பதிவே காரணம் என ஊழியர்கள் குற்றம்சாட்டினர். எனவே, ஆன்லைன் முன்பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈஃபிள் டவர் ஊழியர்கள் 300 பேர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். இதன்காரணமாக இன்று, ஈஃபிள் கோபுரத்தை பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோபுரத்தை காணும் ஆவலுடன் வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். 

Sponsored
Trending Articles

Sponsored