பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு வரவில்லை - அமீர் கான் மறுப்புபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்க உள்ளார். ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவை மிக எளிமையாக நடத்த உள்ளார். இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் அதிபர் மம்மூன் ஹூசைன் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் பங்கேற்க, பிற நாடுகளின் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்களான சுனில் கவாஸ்கர், கபில்தேவ் மற்றும் நவ்ஜோத் சித்து ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள் வந்துள்ளன. ஆனால், இதை அமீர் கான் மறுத்துள்ளார். தனக்கு எவ்வித அழைப்பும் வரவில்லை. இஸ்லாமாபாத்தில் நடக்கும் பதவியேற்பு விழாவுக்கு நான் செல்லவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார். 

Sponsored


இதற்கிடையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் தற்போது பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜோத் சித்து, இம்ரான் கானின் அழைப்பை ஏற்று, பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளப்போவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அவர் இம்ரான் கான் குறித்து கூறும்போது, " எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதைப் பெருமையாக நினைக்கிறேன். இம்ரான் கான் நல்ல நண்பர். அதுமட்டுமில்லை அவர் பன்முகத் திறமையாளர்; மிகவும் புத்திசாலி. எந்த வேலையை எடுத்துக்கொண்டாலும் சிறப்பாகச் செய்யக்கூடியவர்" என்று கூறினார். மேலும், அவர் ஒரு கிரேக்க கடவுள் போன்றவர் என்றும் சொல்லியுள்ளார். கபில் தேவ், சுனில் கவாஸ்கர் போன்றோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது உண்மை என்றும் சொல்லப்படுகிறது. 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored