உலகைக் கலக்கிய கிகி சேலஞ்ச்..! எச்சரிக்கைவிடுக்கும் காவல்துறை #kikichallengeSponsoredதமிழகத்தில் கிகி சேலஞ்சு பற்றி பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால், உலகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கிகி சேலஞ்சு வைரலாகியுள்ளது. தற்போது, சமூக வலைதளங்களில் சேலஞ்சு விடுப்பது ஒரு ட்ரெண்டாக இருந்துவருகிறது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக பேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூலம் சேலஞ்சுகள் பரவிவருகின்றன. அதில் சில மெழுகுபொம்மை சேலஞ்சு, ஒபாமாவையும் விட்டுவைக்காத ஐஸ் பக்கெட் சேலஞ்சு, பிரதமர் மோடிக்கு விராட் கோலி விடுத்த உடற்பயிற்சி சேலஞ்சு என பட்டியல் நீள்கிறது.

 அந்த வரிசையில் இப்போது கால் பதித்திருக்கும் புதிய சேலஞ்சு தான் "கிகி"(Kiki) அல்லது "இன் மை பீலிங்ஸ்"(In my feelings) சேலஞ்சு. அது என்ன கிகி. இது எங்கிருந்து தொடங்கியது. டிரேக் கிராஹம் என்பவர் ஒரு கனடா நாட்டு ரேப் பாடகர். அவருடைய சமீபத்திய ஸ்கார்பியன் என்ற ஆல்பத்தின் புகழ்பெற்ற பாடல் தான் இந்த "கிகி" அல்லது "இன் மை பீலிங்ஸ்".

Sponsored


இந்தப் பாடல் யூடியூப்பில் பயங்கர ஹிட் அடித்தது. இந்தப் பாடலை ஆறு மில்லியன் மக்களுக்கு மேல் பார்வையிட்ட நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் ஷிகி என்பவர், ஒரு மாதத்துக்கு முன்னர் இந்தப் பாடலுக்கு ஆள் இல்லா தெருவில் நடனமாடி அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். ஷிகியின் அந்த வீடியோவையும் பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். இவர், காரிலிருந்து இறங்கி நடனமாடவில்லை. அவரைத் தொடர்ந்து, ஷிகியின் நண்பர் அமெரிக்கன் கால்பந்து(american football) வீரர் ஜூனியர் ஓடெல் பெக்ஹம், 'கிகி' பாடலுக்கு காரிலிருந்து இறங்கி அந்தப் பாடலுக்கு நடமாடினார். 

Sponsored


அதனையடுத்து, அந்தப் பாடலுக்கு நடனம் ஆடுவது #Kikichallenge அல்லது #Inmyfeelingschallenge என சமூக வலைதளங்களில் பரவியது. சமூக வலைதளங்களில் ஒருவருக்கொருவர் கிகி சேலஞ்சை செய்து  கொள்கின்றனர். மெதுவாக செல்லும் காரிலிருந்து இறங்கி அதன் கூடவே அந்த கிகி பாடலுக்கு நடனம் ஆட வேண்டும். அப்போது காரின் ஓட்டுனர் அதை வீடியோ பதிவு செய்வார். பின்னர் மீண்டும் காரில் ஏறிச் செல்ல வேண்டும். இதுதான் அந்த சேலஞ்சு.

 இந்தியாவிலும் பெரு நகரங்களில் இந்த கிகி சேலஞ்சு வைரலானது. சிலர் இதை சரியாக செய்து லைக்ஸ் வாங்கினாலும் பலர் பலத்த காயங்களையே பெற்றனர். இந்தியாவில் இந்த சேலஞ்சு பரவத் தொடங்கும் நேரத்திலே காவல்துறையினர் முற்றுபுள்ளி வைத்தனர்.

 கிகி சேலஞ்சு விவகாரம் தொடர்பாக எச்சரிக்கை விடுத்த மும்பை காவல்துறையினர், 'எங்களுக்கு உங்கள் பாதுகாப்பு முக்கியம். அதை விட்டுத்தர முடியாது' என்று எச்சரிக்கை செய்தனர். அதேபோல பெங்களூர் போலீஸாரும், 'கிகி சேலஞ்சுக்கு நீங்கள் சாலையில் நடனம் ஆடினால் சிறைக் கம்பிகளுக்கு பின்னால் நடனம் ஆட வேண்டியிருக்கும்' என்று கடுமையாக எச்சரித்தனர்.

ஆனால், அதேநேரத்தில் பல்வேறு திரைப் பிரபலங்களும் கிகி சேலஞ்சுக்கு நடனம் ஆடி அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்திருந்தனர். குறிப்பாக இந்தி நடிகை சரதா ஆர்யா, ஆதா சர்மா, தமிழ் நடிகை ரெஜினா கெசன்ட்ரா உள்ளிட்டோரும் ஆடிய நடனம் சமூகவலைதளங்களில் வைரலாகி விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும், அவர்கள் யாரும் இதனை முயற்சி செய்யவேண்டாம் என்று வாசகங்களுடன் அந்த வீடியோவை பதிவேற்றம் செய்திருந்தனர். இருப்பினும், கிகி சேலஞ்சுக்கு எதிராக காவல்துறையினர், கடுமையாக எச்சரிக்கைவிடுத்து வருகிறார்கள். இந்தியா மட்டுமல்ல உலக முழுவதுமுள்ள போலீசாரும் கிகி சேலஞ்சு ஆபத்தானது. அதனை யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று எச்சரிக்கைவிடுத்துவருகிறனர். ப்ளூவேல் விளையாட்டை கட்டுப்படுத்திய காவல்துறையினருக்கு தற்போது விடுக்கப்பட்டிருக்கும் சவால்தான் இந்த கிகிசேலஞ்சு.Trending Articles

Sponsored