பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் பதிவான 16 இலட்சம் செல்லாத வாக்குகள்...!கடந்த மாதம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற்றது. அந்த பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 16 இலட்சம் வாக்குகள் செல்லாத வாக்குகள் என நிராகரிக்கப்பட்டுள்ளன. இது கடந்த தேர்தலை விடவும் அதிகம் எனவும் தெரிய வந்துள்ளது. பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி பாகிஸ்தானின் மொத்த மக்கள்தொகையில் 10 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். அவர்களின் 51% பேர் மட்டுமே தங்களுடைய வாக்குரிமையைப் பயன்படுத்துகின்றனர். அந்த 51% இல் கூட இப்படிச் செல்லாத வாக்குகள் அதிகமாக இருப்பது விழிப்புணர்வு இல்லாததே. த ஃப்ரீ அன்ட் ஃபர் எலக்‌ஷன்ஸ் நெட்வொர்க் (The Free and Fair Elections Network (FAFEN)) எனப்படும் அமைப்பு பாகிஸ்தானின் நான்கு மாகாணத்திலும் நடந்த பொதுத்தேர்தலின் வாக்குப்பதிவுகளை முழுமையாகக் கண்காணித்து கடந்த வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டது.

Sponsored


அதன்மூலம்தான் செல்லாத வாக்குகள் குறித்த தரவுகள் வெளிவந்தன. 16 இலட்சம் செல்லாத வாக்குகள் என்பது கடந்த 2013 பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் பதிவான செல்லாத வாக்குகளை விடவும் 11.7% அதிகம். வாக்குச்சீட்டில் முறையாக வேட்பாளர்களின் பெயர்களைத் தேர்ந்தெடுக்காதது, தெளிவற்ற முறையில் வாக்குச்சீட்டை நிரப்புவது, ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களைக் குறிப்பிடுவது போன்றவை செல்லாத வாக்குகளாக நிராகரிக்கப்படுகின்றன. பாகிஸ்தானில் இன்றும் தேர்தலுக்காக மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. காகிதங்களையேப் பயன்படுத்துகிரார்கள். இந்த செல்லாத வாக்குகளின் மூலம் பாகிஸ்தானின் 270 தொகுதிகளின் 49 தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் மாறியுள்ளன. இந்த 49 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளனர். இதுபோன்று பஞ்சாப் மாகாண தேர்தலில் 120 தொகுதிகளில் இப்படி நிகழ்ந்தது. தொடர்ச்சியாகச் செல்லாத வாக்குகள் அதிகமாவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored