இம்ரான் கான் பதவியேற்பு - பாகிஸ்தானில் உள்ள 27 இந்திய மீனவர்கள் விடுவிப்புSponsoredபாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்ற பிறகு அங்குள்ள 27 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான்கான், அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்கவுள்ளார். ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவை மிக எளிமையாக நடத்த உள்ளார். இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் அதிபர் மம்மூன் ஹூசைன் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இவர் பதவியேற்ற மறுதினம் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களில் 27 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Sponsored


கராச்சி சிறைசாலையில் உள்ள இந்திய மீனவர்கள் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி விடுதலை செய்யப்பட உள்ளனர். விடுதலை செய்யப்படும் மீனவர்களின் பெயர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை மேலும் விடுதலையாகும் மீனவர்களுக்கு உணவு மற்றும் பயண செலவை பாகிஸ்தான் அரசே செய்ய உள்ளது அவர்கள் அனைவரும் வாஹா எல்லை வழியாக வரும் 14-ம் தேதி அதாவது பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினத்தன்று இந்தியாவுக்குள் வருவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored