‘திறமையானவர்களை விட்டுக்கொடுக்கூடாது!’: இந்திய சிறுவனுக்காக போராடும் லண்டன் எம்.பிக்கள்Sponsoredபெங்களூருவில் பிறந்த ஸ்ரேயாஸ் ராயல் என்ற 9 வயது சிறுவன் சர்வதேச செஸ் போட்டிகளில் பங்கேற்று ''சதுரங்க மேதை'' ஆக உருவேடுத்து வருகிறார். தற்போது, லண்டனில் வசித்து வரும் சிறுவனுக்கு விசா சிக்கல் ஏற்பட்டுள்ளது. `இங்கிலாந்தில் கிடைக்கும் ஆதரவு மற்றும் அங்கீகாரம் தொடர்ந்து கிடைக்க வேண்டும்' அந்நாட்டு உள்துறை அமைச்சகத்திடம் முறையிட்டுள்ளார் ஸ்ரேயாஸ் தந்தை. 

Photo Credit - facebook/Shreyas Royal

Sponsored


இந்திய மென்பொருள் தொழில் நிறுவனம் ஒன்றில், பணியாற்றி ஸ்ரேயாஸ் தந்தை ஜிதேந்திர சிங், கடந்த 2012-ல் அந்நிறுவனத்தின் சார்பில் லண்டனில் பணிபுரிய சென்றுள்ளார். தன்னுடன் மனைவி மற்றும் மகனையும் அழைத்துச் சென்றிருக்கிறார். மூன்று வயதில் இருந்து லண்டனில் வளர்ந்த ஸ்ரேயாஸ், சிறுவயது முதலே ராயல் செஸ் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பிரிட்டன் சார்பாக சர்வதேச செஸ் போடிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகிறார். செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளின் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதன் மூலம் தனது வயதுக்கு உட்பட்ட பிரிவில் உலகளவில் 4-வது இடத்தைப் பிடித்திருக்கிறார். இந்நிலையில், இவர் லண்டலின் தொடர்ந்து இருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் அவர், லண்டனை விட்டு வெளியேறும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். 

Sponsored


Photo Credit - facebook/Shreyas Royal

இதனால், ஸ்ரேயாஸ் ராயலின் பெற்றோர் லண்டன் உள்துறை அமைச்சகத்தை அணுகியுள்ளனர். ` ஸ்ரேயாஸ் ராயல் ``தேசிய சொத்து'' நாட்டிற்காக செஸ் போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறான். தனது வெற்றியால் ஸ்ரேயாஸ் நிச்சயம் நாட்டிற்குப் பெருமை தேடித் தருவான். அதற்கு, தொடர்ந்து லண்டனில் இருக்க வேண்டும். ஆனால், விசா காலம் முடிவடைந்து விட்டதால் இந்தியா செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. விசா காலத்தை மீண்டும் மறு பரிசீலனை செய்ய வேண்டும்' என்று முறையிட்டுள்ளனர். 

இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ள அந்நாட்டின் எம்.பிக்கள், `திறமையாளர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற கூடாது' என ஸ்ரேயாஸ் ராயல் லண்டனில் இருக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  விசா காலத்தை நீட்டிக்க வேண்டும் என்றால் ஜிதேந்திர சிங்கின் ஆண்டு வருமானம் 1,20,000 பவுண்டுகள் மேல் அதிகமாக இருக்க வேண்டும். `குடியேற்ற விதிகளில் அடிப்படையிலேயே ஒவ்வொரு விசா வழக்குகளும் மதிப்பீடு செய்யப்படுகிறது' என்று அந்நாட்டு உள்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது. 
 Trending Articles

Sponsored