`என் பலம் எனது நண்பர்கள்..!' - சோனாலி பிந்த்ரே நெகிழ்ச்சிSponsored 'உண்மையான நட்பு என்ன என்பதை எனக்குக் காண்பித்ததற்கு நன்றி' என தனது நண்பர்களுக்கு  நடிகை சோனாலி பிந்த்ரே தெரிவித்திருக்கிறார் .

Photo Credit -insta/Sonali Bendre

Sponsored


புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார் நடிகை சோனாலி பிந்த்ரே. 'காதலர் தினம்' படம் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் அவர், தனக்கென ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். அதன்பிறகு, பாலிவுட்டில் பிசியானர். இந்நிலையில், அவர் எதர்ச்சையாக எடுத்த மருத்துவ பரிசோதனையில் புற்றுநோய் பாதிப்பில் சிக்கி உள்ளது தெரியவந்தது. இதனை, தனது ட்விட்டர் பதிவின் மூலம் சோனாலி உறுதி செய்தார். இது, பாலிவுட், கோலிவுட் நட்சத்திர வட்டாரங்களைச் சோகத்தில் ஆழ்த்தியது. 

Sponsored


இந்நிலையில், அமெரிக்கா, நியூயார்க் நகரில் சிகிச்சை பெற்று வரும் அவர், நன்பர்கள் தினத்தை விமர்சையாக கொண்டாடியுள்ளார். மொட்டை அடித்து தனது சக தோழிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதனுடன், `ஒவ்வொரு நிமிடத்திலும் அதீத கவனம் செலுத்தி வருகிறேன். மகிழ்ச்சியைக் கண்டெடுக்க ஒவ்வொரு வாய்ப்பையும் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் சில நேரங்களில் எனது ஆற்றல் குறைந்து விடுகிறது. வலிகளும் அதிகமாக உள்ளது. இந்த சூழலில் இருந்து என்னை மீட்டெடுக்க நண்பர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். எனது பலத்தின் தூண்கள் என் நண்பர்கள் தான். அவர்களின் பிசியான வேலைகளுக்கு நடுவே, எனக்காக நேரம் ஒதுக்கி கால் செய்து நலம் விசாரிக்கின்றனர். எனவே, நான் தனியாக இல்லையென்று உணரவில்லை. உண்மையான நட்பு என்ன என்பதை எனக்குக் காண்பித்ததற்கு நன்றி. இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்' என உணர்வுப் பூர்வமாக பதிவிட்டுள்ளார். Trending Articles

Sponsored