ரஷ்ய வழக்கறிஞர் விவகாரம் - உண்மையைப் போட்டு உடைத்த ட்ரம்ப்அமெரிக்க தேர்தலின்போது, தனது மகன் ரஷ்ய வழக்கறிஞரைச் சந்தித்துப் பேசியது உண்மைதான் என பகிரங்கமாக ஒப்புக்கொண்டார் அதிபர் ட்ரம்ப். 

Sponsored


அமெரிக்காவில் அதிபராகப் பதவியேற்றதிலிருந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் டொனால்ட் ட்ரம்ப். அதிபர் தேர்தலின்போது ட்ரம்பை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனை வீழ்த்த, ரஷ்யாவைச் சேர்ந்த கிரெம்ளின் என்ற வழக்கறிஞரை ட்ரம்பின் மகன் ஜூனியர் டொனால்டு ட்ரம்ப் சந்தித்துப் பேசியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்தக் குற்றச்சாட்டு உண்மையில்லை என்று ட்ரம்ப் மற்றும் அவரின் மகன் மறுப்பு தெரிவித்தனர். முன்னதாக, கடந்த 2016-ல் நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாகச் சர்ச்சைகள் எழுந்தன. இந்தப் புகார் தொடர்பான விசாரணையை அமெரிக்க புலனாய்வுத் துறை மேற்கொண்டு வருகிறது. 

Sponsored


Sponsored


இந்நிலையில், ரஷ்ய வழக்கறிஞரைச் சந்தித்தது தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், சட்ட ரீதியான அபாயத்தில் ஜூனியர் டொனால்டு ட்ரம்ப் சிக்கியதால் அதிபர் கவலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதைத்தொடர்ந்து, தன் மகன்மீது எழுந்த குற்றச்சாட்டை ட்ரம்ப் மறுத்துவந்த நிலையில், தற்போது அதைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், `ட்ரம்ப் டவரில், ரஷ்ய வழக்கறிஞரை ட்ரம்ப் ஜூனியர் சந்தித்தது குறித்து வெளியான செய்தியால் தான் கவலையில் ஆழ்ந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது முற்றிலும் பொய்யான தகவல். தேர்தலில் தங்களை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களைப் பெறுவது சட்டபூர்வமானதுதான். அரசியலில் இதுபோன்று நடைபெறுவது வழக்கம். சட்டபூர்வமாகவே இந்தச் சந்திப்பு நடைபெற்றது' என்று விளக்கம் கொடுத்துள்ளார்.Trending Articles

Sponsored