`உன் நாட்டுக்குத் திரும்பிப் போ..!' - அமெரிக்காவில் இந்தியர் மீது இனவெறித் தாக்குதல்Sponsoredஅமெரிக்காவில் சீக்கியர் ஒருவர்மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. `உங்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்லுங்கள்' எனத் தாக்குதல் நடத்தியவர்கள் மிரட்டியதால், அங்குள்ள இந்தியர்கள் அச்சத்தில் உரைந்துபோய் உள்ளனர்.  

அமெரிக்காவில் குடியுரிமைப் பெற விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் அதிகம். சீக்கியர்கள், மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள், தமிழர்கள் என அமெரிக்காவில் அதிகளவில் வசிக்கின்றனர். இந்த நிலையில், சமீபகாலமாக அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல் நடந்து வருகிறது. அதிலும், சீக்கியர்கள்மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. இதற்கு, சான்றாக கலிபோர்னியா மாகாணத்தில் 50 வயதுடைய சீக்கியர் ஒருவர்மீது கடுமையாக இனவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர் அந்நாட்டவர்கள்.

Sponsored


கலிபோர்னியாவில் கேயெஸ் மற்றும் ஃபூட்டே சாலை சந்திப்பில் கடந்த வாரம் உள்ளூர் பிரசார கூட்டம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. இதில், இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்மீது, அதே பிரசாரத்தில் கலந்துகொண்ட இரண்டு அமெரிக்கர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அவரை அடிக்கும்போது, ``உங்களை நாங்கள் வரவேற்கவில்லை; உங்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்லுங்கள்'' என்று கூறி கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். 

Sponsored


சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் விழுந்து கிடந்த சீக்கியரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். `தலையில் டர்பன் அணிந்திருந்ததால் அவரின் தலை தப்பித்தது' என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், அவரது வாகனத்தின் மீதும் ``go back to your country'' என கறுப்பு நிற பெயின்டால் ஸ்ப்ரே அடித்து தங்களது வெறுப்பைக் காட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கலிபோர்னியா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Trending Articles

Sponsored