பெப்சியின் முதல்பெண் சி.இ.ஓ இந்திரா நூயி பதவி விலகுகிறார்!Sponsoredபெப்சி குழும நிறுனத்தின் முதல் பெண் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த இந்திரா நூயி, பதவி விலகுகிறார். 

உலக அளவில் குளிர்பானங்களில் புகழ்பெற்ற நிறுவனமான பெப்சி நிறுவனத்தில் கடந்த 24 ஆண்டுகளாகப் பணியாற்றிவருபவர், இந்தியப் பெண் இந்திரா நூயி. இவர், கடந்த 12 வருடங்களாக அந்த நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றிவருகிறார். பெப்சி நிறுவன வரலாற்றில், முதல்முறையாக வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தலைமை அதிகாரியாகப் பதவி உயர்வுபெற்ற பெருமை இவரையே சேரும். 

Sponsored


இந்நிலையில் தற்போது, இந்திரா நூயி தனது தலைமைச் செயல் அதிகாரி பதவியை ராஜினாமாசெய்துள்ளார். தற்போது, பெப்சியின் தலைவராக உள்ள ரேமன் லகார்டா, புதிய செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட உள்ளார். மேலும், இந்திரா நூயி 2019-ம் ஆண்டு இறுதிக்குள் அந்நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார். “பெப்சி நிறுவனத்தை வழிநடத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன். இந்தியாவில் பிறந்த எனக்கு இவ்வளவு பெரிய நிறுவனத்தை வழிநடத்தும் வாய்ப்பு கிடைக்கும் எனக் கனவிலும் நான் நினைக்கவில்லை” என இந்திரா நூயி தெரிவித்துள்ளார்.

Sponsored
Trending Articles

Sponsored